மகாலக்ஷ்மி நிரந்தரமாக இருக்கும் இடம்….

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனும்.. மகாலஷ்மியும்  பேசிக் கொண்டிருந்தார்கள்..  பேச்சு அப்படியே  பூலோகம் பற்றி வந்தது..  பரந்தாமனுக்கு தேவியை கோபப்படுத்தி பார்க்க ஆசைவந்தது. எப்போதும் சதா கேள்வி கேட்டு துளைக்கும் மகாலஷ்மியை இன்று நாம் கேட்கலாம் என்று நினைத்தவர்… ”தேவி உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா” என்றார்..  ”என்னிடம் தாங்கள்  என்ன  கேட்க போகிறீர்கள்? .. சுவாமி… கேளுங்களேன் எனக்குத் தெரிந்ததைச்  செய்கிறேன்”  என்றாள்..

“பக்தர்கள் படும் பாட்டை காண சகியாமல் எப்போதும் உங்கள் பக்தன் நல்லவன்.. அவன் இப்படிச் செய்கிறான். இவன்  இப்படி இருக்கிறான் என்று   பூலோகப் பெண்கள் போல் புலம்புகிறாயே.. நீ ஒரு நாள் இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்ள கூடாதா? நான் சற்றேனும் ஓய்வெடுப்பேனே?” என்றார்.. ”அது எப்படி முடியும் சுவாமி.. அவ்வளவு பெரிய சுமையை என்னால் சுமக்க முடியுமா..?”  என்று தயங்கினாள் மகாலஷ்மி.. ”சரி ஒரு நாள் வேண்டாம்..  ஒரு மணி நேரம்..” என்றார்… அதற்கும் சம்மதிக்கவில்லை  மகாலஷ்மி…  ”ஒரு  நிமிடம்” என்றார் மீண்டும் விடாமல்… ”என்னை நம்பி இவ்வளவு பெரிய சுமையை கொடுக்கிறீர் களே” என்று சொன்னாலும் ஏற்றுக்கொண்டாள் லஷ்மி தேவி..  ஒரு நிமிடத்தில் என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது அவளுக்கு…

ஆனால் ஒரு நாழிகை போதுமே பிரளயம் வருவதற்கு.. பக்தர்களின் புலம்பல் களும்  வேண்டுதல்களும் துன்பங்களும் துயரங்களும் ரீங்காரமாக தேவியின் செவிகளில் விழுந்தது..ஒன்றா இரண்டா ஓராயிரமா முடியவில்லை ”சுவாமி” என்று ஸ்ரீமந் நாராயணனிடம் அடைக்கலமானாள்.. புன்னகையுடன் பரந்தாமன் கேட்டார். ”என்னாயிற்று தேவி..”  என்றார். ”இவ்வளவு சுமையெல்லாம் என்னி டம் கொடுக்காதீர்கள்.. எனக்கு பிடித்த பக்தர்களின் வீட்டில் நான் வசித்துக் கொள் கிறேன் என்றாள்..   ”நீ வசிக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பு கிறாய்?”  என்று கேட்டார்  பரந்தாமன்.

”தர்மம் செய்பவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், பிற உயிர்களிடத்தும்  அன்பு செலுத்துபவர்கள், பொய் சொல்லாதவர்கள், கர்வமில்லாதவர்கள்,   கடவுள் மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்கள், அமைதியும் அன்பும் கொண்டிருப் பவர்களின் வீட்டில் தான் நிரந்தரமாக வசிப்பேன்” என்றாள்..  ஸ்ரீமந் நாராயணன் அகம் மகிழ்ந்து ”அப்படியே ஆகட்டும் தேவி” என்று வாக்களித்தார்.

உங்கள் வீட்டிலும் லஷ்மி வாசம்  செய்ய முதலில்  கடைப்பிடிக்க வேண்டியது மேலே சொன்னதுதான்.. அன்பும், இரக்கமும், பொறுமையும், இறை நம்பிக் கையும் லஷ்மி நிரந்தரமாக வாசம்  செய்யும்  இடங்களே.

Sharing is caring!