மக்களே அவதானம்! வாய்ப்புண் புற்றுநோயாக மாறலாம்..!!

வாய்ப்புண் வருவது சாதாரணம் என்றாலும் அதைக் கண்டும் காணாமல் இருக்கும் போது பிரச்சனை பெரிதாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.

முதலில் கன்னம், நாக்கு, அண்ணப் பகுதிகளில் வரும் வாய்ப்புண் நாளடைவில் கொப்புளங்களாக மாறி காய்ச்சல், தலைவலிக்கும் வழிவகுக்கிறது.

அத்துடன் சாப்பிட முடியாமலும், உணவை விழுங்க முடியாமலும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

பெரும்பாலான வாய்ப்புண்கள் உணவின் மூலமாக அல்லது ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும்.

இதுதவிர சில நோய்களின் அறிகுறியாகவும் வாய்ப்புண்கள் வரலாம், எனவே அதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

காரணங்கள்
  • மலச்சிக்கல் பித்த அஜீரணம்
  • உடற்சூடு
  • விட்டமின் சி, பி12 குறைபாடு
  • வீரியம் மிக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல்
  • உணவு ஒவ்வாமை
  • புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள்
  • வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள்
  • குடல் மற்றும் இரைப்பில் புண் இருப்பவர்கள்
  • அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
சாப்பிட வேண்டியவை

வெல்லம், பாசிப் பயறு சேர்த்துக் கஞ்சியாக குடிக்கலாம்.

கீரை, பசும்பால், தேங்காய்ப்பால், பீர்க்கங்காய், புடலங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

முருங்கைக்கீரை மற்றும் பூ, சிறுகீரையை சமைத்துச் சாப்பிடலாம்.

கொய்யா இலைகளை மென்று துப்பலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரப் பொடி அல்லது கடுக்காய் பொடியை வாங்கி, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

தடுக்கும் வழிமுறைகள்

நல்ல உணவுப் பழக்கம், மிதமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, நல்ல தூக்கம் ஓய்வு மூலம் தடுக்கலாம்.

மேலும், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்க கூடிய, ஆன்ட்டி பாக்டீரியா மவுத்வாஷ் கொண்டு, வாயைக் கொப்பளிப்பதன் மூலம் தடுக்கலாம். தினமும் காலையிலும், இரவு உறங்குவதற்கு முன் பல் துலக்குவதன் மூலம் வாய்ப்புண்ணை தடுக்கலாம்.

என்ன செய்யலாம்?

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில், குணமாகி விட வேண்டும்.

மேலும், வாய்ப்புண் தொடர்ந்தால், உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

Sharing is caring!