மஞ்சளை வைத்து வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்

மஞ்சளை மருத்துவத்திற்கு மட்டுமல்ல வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தலாம் என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. இதன் மூலம்  வெடிகுண்டு இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமாம்.

நோயை விரட்டும் மஞ்சள் :

மஞ்சள்தூளை உணவில் சேர்ப்பதால் வயதான பிறகு ஏற்படும் அல்சைமர் நோய் எனப்படும்  மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு  குறைக்கின்றது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் எந்த வித அலர்ஜீ ஆனாலும் முதல் மருந்து மஞ்சள் கலந்த தண்ணீருதான், காய்ச்சல் , சளியா! இருக்கவே இருக்கு மஞ்சள் கலந்த பால்.  இந்த மஞ்சள் புற்று நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

 சமையலறையில் மஞ்சளின் பயன்கள்:

 

 

சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்க பயன்படும் மஞ்சள், உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது, பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. மேலும் வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது, இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.  அது மட்டுமல்ல சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

Sharing is caring!