மந்திரங்கள் சக்தி மிகுந்தவையா?

இறைவனை வணங்குவதிலும் வழிபடுவதிலும் பல்வேறு முறைகளை கையாள்கிறோம். இந்துமதத்தில் வேதங்களில் மந்திர சக்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறது.  மந நாத் த்ராயதே இதி மந்த்ர என்று வடமொழி ஸ்லோகம் ஒன்று உண்டு. இதற்கு அர்த்தம் மனனம் செய்தால் காப்பாற்றுவது என்பது..

மந்திரத்துக்கு காக்கும் சக்தி உண்டா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்லவேண்டும். பொதுவாகவே சத்தத்துக்கு பொருள்களை அதிர வைக்கவும், இயங்க வைக்கவும் ஆற்றல் உண்டு. மனிதனின் உடலில் உயிர் என்ற நாதம் சத்தம் மூலாதாரத்தில் உடலில் நடுப்பகுதியில் அமர்ந்து உடல் முழு வதும் அதிர்வலைகளாக துடிப்புகளாக பரவுகிறது.

உயிர் சக்தி அண்டம் முழுவதும் பரவியிருப்பதால் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சித்தர் வாக்கியம் சொல்கிறது. பஞ்ச பூதங்களும் கூட நாத அலைகளால் இயங்குகிறது.
ஹம் என்ற மந்திரம் ஆகாயத்துக்கும், யம் என்ற மந்திரம் காற்றுக்கும், ரம் என்ற மந்திரம் நெருப்புக்கும், வம் என்ற மந்திரம் நீருக்கும், லம் என்ற மந்தி ரம் நிலத்துக்கும் சொந்தமானதாகும். பஞ்சபூதங்கள் போன்றே ஒவ்வொரு இறைவனுக்கும் தனித்தனியான பீஜமந்திரங்கள் உண்டு.

கீதையில் கிருஷ்ண பரமாத்மா உனக்கு நீயே நண்பன், உனக்கு நீயே விரோதி என்று கூறுவார். அதாவது அவனவன் பிரச்னைக்கான தீர்வு அவனிடமே உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய தனி மந்திரத்தை அமிர்த தாரா மஹா மந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவன் எந்த பரிகாரத்துக்கும் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை.

இப்போது மந்திரங்கள் தமிழிழும் வந்துவிட்டது. ஆனால் சித்தர்கள் மந்திரங் களை உச்சரிக்கும் போது வடமொழியில் உச்சரித்தார் கள்.வடமொழியில் ஒவ் வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. உதாரணத்துக்கு குரு என்ற வார்த்தையை எடுத்துகொண்டால் கு என்ற எழுத்து இருட்டையும், ரு என்றால்  அழித்தல் என்றும் பொருள்.அறியாமையை அழிப்பவன் குருவாகிறான்.  நான் என்பதை வடமொழியில் அஹம் என்றும் குறிப்பிடுவார்கள்.

இதில் அ என்பது இறைவனையும் ஹ என்பது மாயையும் குறிக்கும். மனிதனுக்குள் மறைந் திருக்கும் இறைத்தன்மையையும் மாயை மறைக்கிறது எனலாம்.

Sharing is caring!