மனம், உடலை தூய்மை ஆக்கும் ஏகாதசி விரதமும் அதன் பலன்களும்!

மனித உடலும் ஓர் எந்திரம் தான். தொடர்ந்து ஓய்வின்றி உழைக்கும் நம் உடலுக்கும் அவ்வப்போது சற்று ஓய்வு தேவை. அப்போதுதான் அது எவ்வித தொந்தரவையும் நமக்கு தராது.
தினமும் தூங்கி எழுவதும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓய்வு எடுப்பதும், நம் வெளி உறுப்புகளுக்கு தரும் ஓய்வாகவே கருதப்படுகிறது.

நாம் தினசரி உண்ணும் உணவை அரைத்து, அதை கூழாக்கி, அதில் உள்ள சத்துக்களை கிரகித்து, நம் உடலின் பிற பாகங்களுக்கு அனுப்பி வைக்கும் உள் உறுப்புகளுக்கு நாம் ஓய்வே கொடுப்பதில்லை. இதைப்பற்றி நாம் சிந்திப்பதும் இல்லை.

நம் உள்  உறுப்புகளுக்கு அவ்வப்போது ஓய்வளிப்பதோடு, அத்துடன் ஆன்மிகத்தையும் கலந்து, நம் மனதையும் சாந்தப்படுத்தும் வழிமுறையை, விரதங்கள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அத்தகைய விரதங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏகாதசி விரதம்.
மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாளன்று விரதம் இருந்து, இறை சிந்தனையுடன் கழித்தால், உடலும், மனமும் தூய்மை அடையும்.

ஏகாதசி விரதத்தை எப்படி துவங்குவது, அதன் சிறப்பு போன்றவற்றை காணலாம்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பு பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து, தொடர்ந்து வரும் ஏகாதசி  நாட்களில் விரதம் இருந்தால், நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. .

* மார்கழி தேய்பிறை ஏகாதசி “உத்பத்தி ஏகாதசி”” எனப்படும்.  இந்த  நாளில் விரதம் இருந்தால், பகையை வெல்ல முடியும்.

Sharing is caring!