மனித உருவில் வந்து கேட்ட வரம் கொடுக்கும் உன்னதமான தெய்வம் ஷீரடி பாபா…!! சாயி சரிதம் படியுங்கள்…!

சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள். சீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை.அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ‘சாய்சத் சரிதம்’ நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும். யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.

ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும். ஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:- முதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை, இரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை, மூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை, நான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை, ஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை, ஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை, ஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை. இன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும், உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

Sharing is caring!