மன அழுத்தம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்!

இதுவரைக்கும் சின்ன பொடுசுல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் சொல்ற ஒரு விஷயம், நான் ஒரே டென்ஷனாக இருக்கேன் என்பது தான். மருத்துவர்களும் மன அழுத்தம் வந்தா போச்சு, உங்க தூக்கம் போச்சு, உங்க உடல் நலம் போச்சு, வாழ்க்கையே போச்சுனு பயங்காட்டியும் விட்ருறாங்க. இதனாலேயே மக்கள் டென்ஷனுக்கு மாத்திரை எடுக்க போய் மாத்திரை எடுப்பதே டென்ஷனாகி விடுகிறது. சரிங்க அப்போ இந்த மன அழுத்தத்தை எப்படி தாங்க கையாள்வது?

உண்மையைச் சொல்லப் போனால் மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல. அது ஒரு மனதிற்கு குழப்பமான ஒரு சூழ்நிலை. இதை நீங்கள் சரியான திசையில் கையாண்டாலே போதும் அது உங்களுக்கு நன்மைகளை கொடுக்க தயாராகிவிடும். மன அழுத்தம் மன அழுத்தம் என்று சதா பேசிக் கொண்டே உங்கள் மனசுக்கு கொடுக்கும் அழுத்தம் தான் அதிகம் . ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த மன அழுத்தம் இல்லாதவர் யார், மன அழுத்தம் வரும் போது தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலுகிறோம்.நம் மனதை வலுப்படுத்துகிறோம், நேர்மையாக சிந்திக்க தொடங்குகிறோம், வெற்றியை நோக்கி நகர முயற்சி செய்கிறோம் இப்படி ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் மன அழுத்தம் செய்யக் கூடியது. எனவே எதையும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாங்க அதைப்பற்றி தான் நாம் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.யூஸ்ட்ரெஸ் நல்ல மன அழுத்தமாம் நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஸ்ட்ரெஸ், யூஸ்ட்ரெஸ் மற்றும் நாள்பட்ட ஸ்ட்ரெஸ். இதில் யூஸ்ட்ரெஸ் என்பது ஒரு குறுகிய கால மன அழுத்தம் ஆகும். இது நல்லதும் கூட. ஏனென்றால் இது நாம் எதையாவது உற்சாகமாகவும் பதட்டமாகவும் செய்யும் போது பொதுவாக ஏற்படுகிறது. உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை இயக்குவதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் இந்த மன அழுத்தம் உங்களுக்கு நல்லது செய்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் என்பது நீண்டகால மன அழுத்தமாகும், இது அடிக்கடி அல்லது அதிக நேரம் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் .

மன அழுத்தம் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது? மன அழுத்தமும் நம் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளைச் செய்கிறது. இப்போது அந்த நன்மைகள் என்னவென்று காண்போம். அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது இதுவரை மன அழுத்தம் தீங்கானது என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் இதை நீங்கள் நேர்மறையாக கையாளும் போது உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித் தருகிறது. இது உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. செயல்திறனை மேம்படுத்துகிறது. யூஸ்ட்ரெஸ் அல்லது குறுகிய கால மன அழுத்தத்தின் போது ஏற்படும் ஆற்றலின் எழுச்சி உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்த உதவுகிறது. இதனால் நீங்கள் எளிதாக வெற்றியை பெற முடியும். இந்த வகையான மன அழுத்தம் உண்மையில் உங்களை ஊக்குவிக்கிறது. ஒரு பரீட்சை அல்லது நேர்காணலுக்கு போகும் முன்பு ஏற்படும் மன அழுத்தம் உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தருகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறார்கள்! ஆம் அப்படி மனதுக்குள் ஏற்படும் அழுத்தத்தால் அதற்கு தயாராக முடிகிறது. நீங்களும் வேலையை அடைய முயற்சி செய்யத் துவங்குகிறீர்கள்.

மூளை சக்தியை அதிகரிக்கிறது நல்ல மன அழுத்தம் மூளை சக்தியை மேம்படுத்தும் மூளை வேதிப்பொருட்களான ‘நியூரோட்ரோபின்களை’ தூண்டும் அழுத்தங்களை உருவாக்குகிறது. இது நினைவுச் செறிவை அதிகரித்து வேலையில் நீங்கள் கவனமாக செயல்பட செய்கிறது. இதனால் உங்கள் வேலையில் சிறந்து விளங்க உதவுகிறது. உங்களின் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. இந்த நாட்களுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என நினைக்கும் போது எழும் மன அழுத்தம் உங்கள் வேலையை சரியாக திறம்பட குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க உதவும்.

நோயெதிப்பு சக்தியை வலிமையாக்குகிறது குறுகிய கால மன அழுத்தம் ஏற்படும் போது, ​​உங்கள் உடல் தொற்று அல்லது காயம் போன்ற அச்சுறுத்தல்களாக இருக்கும் என சந்தேகிக்கிறது. இதனால் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்தி எதிர்த்து போரிட தயாராகுகிறது. இது உடலின் பாதுகாப்பு அமைப்புக்கு ஊக்கமளிக்கும் இன்டர்லூகின்ஸ் ரசாயனத்தை வெளியிடுகிறது. நோயின் போது மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த பிறகு அவரை பார்த்த பிறகு, உங்களை உடனடியாக நன்றாக உணர வைப்பது ஏன் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்! இந்த பாதுகாப்பு உணர்தல் தான் அவ்வாறு நம்மை உணர வைக்கிறது.

நம்மை வலிமையாக்குகிறது மன அழுத்தம் உங்களைக் கொல்லாமல் உங்களை வலிமையாக்கக் கூடியது. இப்படி ஏற்படும் மன அழுத்தத்தை நீங்கள் கையாண்டு கையாண்டு வலிமையாகி விடுவீர்கள். இதனால் வாழ்க்கை உங்கள் மீது வீசும் பெரிய சிக்கல்களைக் கூடக் கையாள்வது உங்களுக்கு எளிதாகிறது. உங்கள் மூளையும் மன அழுத்தத்தை கையாள பயிற்சி பெறுகிறது.வெற்றியைத் தேடித் தருகிறது உண்மையில் மன அழுத்தம் உங்களுக்கு வெற்றியை தரும். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை நேர்மறையாக நீங்கள் எடுக்கும் போது உங்களுக்குள் நம்பிக்கையும், கவனமும் ஏற்படுகிறது. இது உங்களை தானாகவே சரியான திசையில் முயற்சி செய்யத் தூண்டுகிறது. இப்படி ஒரு வேலையை இலக்கை முடிப்பதை பற்றி யோசிக்கும் போது அதை நோக்கி கவனம் செலுத்துவீர்கள். இதனால் வெற்றி வாகை சூட முடியும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். எனவே இனி மன அழுத்தம் மன அழுத்தம் என்று அழுது புலம்பாமல் கவலையில் சோர்ந்து போகாமல் அதை நேர்மறை திசையில் பயணிக்க வையுங்கள். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்மையை தேடித் தரும்.

Sharing is caring!