மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்!

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது.

நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.

தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.

அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்க்கும் ஆற்றல்

இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.

நீரிழிவு

இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.

இதய நோய்கள்

இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.

தைராய்டு

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.

Sharing is caring!