மரண தருவாயிலில் சாய்பாபா

தன் மரணம் விரைவில் நிகழ இருப்பதை அவர் தீர்க்கமாகப் புரிந்து கொண்டார்அதற்கேற்ப தனது வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டார்தனது நெருங்கிய பக்தர்களில் ஒருவரான “வஜே” என்பவரை அழைத்தார்தன் அருகே அமர்ந்து “ராமவிஜயம்” நூலை முழுவதுமாக உரக்கப்படிக்குமாறு ஆணையிட்டார் .

வஜேயும் அந்நூலைப் படிக்க ஆரம்பித்தார்இரவும் பகலும் விடாமல் படித்துக் கொண்டே இருந்தார் சாய்பாபாவும் எந்தவொரு சலனமும் இல்லாமல் அதனை மெய்மறுந்து கேட்டு ரசித்து இன்புற்றார் மூன்றே நாட்களில் இரண்டாவது இராயணத்தைப் படித்து முடித்தார்எனினும் சாய்பாபாவிற்கு அலுப்புத் தட்டவில்லைதொடர்ந்து படிக்குமாறு பக்தருக்குக் கட்டளையிட்டார்வஜேயும் தொடர்ந்து ராமவிஜேயத்தைப் படித்துக் கொண்டே இருந்தார் .

இப்படி பதினோரு நாட்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார்போதும் என்று சாய்பாபா சொல்லாமல் அதனைக் கேட்டு இன்புற்றுக் கொண்டே இருந்தார் இருப்பினும் வஜேயால் அதற்கு மேல் அந்நூலைப் படிக்க முடியவில்லைதயக்கத்துடன் சாய்பாபாவிடம்என்னால் இதற்கு மேல் படிக்க முடியவில்லை சாய்பாபாரொம்பவும் களைப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

அதனைப் புரிந்து கொண்ட சாய்பாபாவும் அத்துடன் படிப்பதை நிறுத்திக் கொள்ள அனுமதித்தார்அவரும் படிப்பதை நிறுத்திக் கொள்ளஅப்புறம் நீண்ட அமைதி காத்தார் சாய்பாபாபக்தர்களும் வெகு அமைதியுடன் அமர்ந்திருந்தனர்அநேகமாககடந்த செப்டம்பர் மாதம் முதல் சாய்பாபா உணவு உட்கொள்வது குறைந்து போயிருந்தது சொல்லப்போனால் முற்றிலும் இல்லாதிருந்தது என்பதே உண்மைஇதனால்சாய்பாபா எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்தார்இப்படிப்பட்ட நிலையிலும் தான் சமாதி அடைவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சாய்பாபா பக்தர்களின் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்திருக்கிறார். அவரைப் பக்தர்கள் சிலர் கைத்தாங்கலாக அழைத்துப் போயிருக்கின்றனர் .

இந்நிலையில்பக்தர்களிடம் திடீரென்று அவர் பேசினார்..” நீங்கள் யாரும் மனமுடைய வேண்டாம் கவலைப்படாமல் இருங்கள் என்றார் சாய்பாபாஅப்புறம் அடியவர்களிடம் ,” எனக்கு இந்த மசூதியில் இருப்பது அசெளகர்யமாக உள்ளது. “புட்டியினுடைய தகடிவாடாவுக்கு என்னை எடுத்துச் செல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் பின்னர் தனது பக்தர் பூடியைப் பார்த்து ,”ராதாகிருஷ்ணன் கோயிலுக்காக இடம் விடச் சொல்லியிருந்தேனேஅந்த இடத்தில் ஆறடி நீளம் இரண்டடி அகலத்தில் குழி ஒன்றை வெட்டி வையுங்கள் என்று உத்தரவிட்டார்.

Sharing is caring!