மருதாணி நன்கு சிவப்பாக நீண்ட நேரம் நிலைக்க

மருதாணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.

சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.

இப்படி செய்வதால் ஜலதோஷம் பிடிப்பது குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.

கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்.

Sharing is caring!