மறந்து போன குல தெய்வத்தை கண்டறியும் எளிய பரிகாரம்!

எல்லா தெய்வங்களுக்கும் மேலானது குல தெய்வம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். அதாவது, நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தையே  குல தெய்வம் என்கிறோம்.

வீதியில் என்ன ஒரு விஷேசமாக இருந்தாலும். குலதெய்வத்தை முதலில் வழிபட்டு விட்டுத்தான் பின் அந்த காரியத்தை துவங்க வேண்டும். அப்படி செய்தால் தான், அந்த காரியம் சிறப்புடன் நிறைவடையும். இந்த நிலையில், சொந்த ஊர் அல்லது மாநிலம் விட்டு வேறு இடங்களில் குடி பெயர்ந்தோர், நாளைடைவில் தங்கள்  குலதெய்வ வழிபாட்டை மறந்து விட வாய்ப்புள்ளது.

அவ்வாறு மறந்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களுக்கு, அவர்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய்விடும். இதனால், குலா தியேவா வழிபாடு தடைபடுவதால், பல்வேறு மனா உளைச்சலை சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்டோர், தங்கள் குலதெய்வத்தை கண்டறிய எளிய பரிகாரம் உள்ளது. வியாழக்கிழமை அன்று, குரு ஓரையில், சிவன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள பைரவரிடம், தங்கள் குலதெய்வத்தை காண்பித்து கொடுக்கும்படி வேண்டினால், 9 வாரங்களுக்குள் உங்கள் குலதெய்வம் பற்றிய தகவல் தெரிய வரும். இப்படி வேண்டும் 9 வாரங்களும், அசைவம் சாப்பிடாமல், இல்லற இன்பத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இது கட்டாயம் நல்ல பலன் தரும்.

Sharing is caring!