மலச்சிக்கலால் அவதியா? இதோ எளிய தீர்வு

இன்றைய காலத்தில் உண்ணும் சீரற்ற உணவு முறையால் எல்லாரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினையா உருவெடுத்துள்ளது மலச்சிக்கல் பிரச்சினை.

இதனால் பலரும் நாளுக்கு நாள் அவதியுற்று வருகின்றனர்.

குறிப்பாக மன அழுத்தம், போதுமான நீர் அருந்தாது, அதிகமான பால் பொருட்கள் உண்ணுதல், கால்சியம் மற்றும் அலுமினியம் கலந்த ஆன்டி ஆசிட் மருந்துகள், மலம் வெளியேறுவதை அடக்குதல் இது போன்ற பிரச்சினைகளால் மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகின்றது.

மலம் கழித்தலுக்கான நேரம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 3 நாட்களுக்கு ஒரு முறை என மலம் கழிப்பது அவ்வளவு நல்லது அல்ல.

இதன் காலப்போக்கில் பல உடல் நல் பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இதனை தடுக்க ஆங்கில மருத்துவத்தை விட இயற்கை மருத்துவமே சிறந்தது ஆகும்.

அந்தவகையில் தற்போது மலச்சிக்கலை தீர்க்கும் எளய வைத்தியங்கள் சிலவற்றை பார்ப்போம்.

 • திரிபலைப் பொடி இதனை 2 முதல் 5 கிராம் அளவிற்கு வெந்நீரில் கலந்து காலையும், மாலையும் வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் மலச்சிக்கல் தீர்வதோடு, உடலும் வலிமையாகும். பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
 • விதையோடு கூடிய காய்ந்த திராட்சையை 20 – 30 எண்ணிக்கை தண்ணீரில் ஊறப்போட்டு அதிகாலையில் அதனை மென்று சாப்பிட்டு நீர் அருந்த சிறந்த பலனுண்டாகும். பெண்கள் மகப்பேறு காலத்திலும் கருவுற்றிற்கும் போதும் இதனை பயன்படுத்தலாம்.
 • கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு குடலின் உள் அடுக்குகளில் நெய்ப்புத் தன்மையை ஏற்படுத்தி மலச்சிக்கலைத் தீர்க்கும். நீரழிவு நோயர்களும் பழங்களைப் பயன்படுத்தலாம்
 • எலுமிச்சை சாறு 5 மி.லி யுடன் ஒரு சிட்டிகை உப்பு 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடலிற்கு உற்சாகம் தரும்.
 • அத்திப்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம் போன்ற பழங்களை மட்டும் இரவு உணவாகப் பயன்படுத்த நிரந்தரத் தீர்வு உண்டாகும்.
 • அலிசி விதையை உணவுடன் போதுமான அளவு சேர்த்துக் கொள்வதால் குடல் இயக்கம் சீராகும். அதி இரத்த அழுத்தம், நீரழிவு, புற்றுநோய், மூட்டுவாத நோய்கள், இதய நோய்களுக்கு எதிரான ஆற்றலை உடலிற்கு அலிசி விதை வழங்கும். எனவே அந்த நோயுடையோர் அலிசியை மலச்சிக்கல் நீக்க அதிகம் பயன்படுத்த வேண்டும்.
 • விளக்கெண்ணெயை இரவு உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி வெந்நீருடன் கலந்து பருகுவதால் மிகச்சிறந்த தீர்வினைக் கொடுக்கும். இதனால் நாட்பட்ட மலச்சிக்கலால் வரும் ஆசன வாய் நோய்களான மூலம், பவுத்திரம், கட்டிகள், வெடிப்புகள் வராமல் தடுக்கப்படும்.
 • கற்றாழைச் சாறு எடுத்து (கற்றாழைச் சோறுடன் படிகாரம் கலந்து எடுக்க வேண்டும் ) அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அல்லது பழச்சாறுகளுடன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பதில் குடல் சுத்தமாகும்.
 • மோருடன் இஞ்சி, பெருங்காயம், கல் உப்பு கலந்து உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப் படுகின்றது.
 • வெந்தயத்தை 12 மணிநேரம் நீரில் ஊற விட்டு பின்பு 12 மணி நேரம் ஈரத்துடன் காற்றுபுகாமல் வைத்தால் முறை கட்டி விடும் . அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது காயவிட்டு பொடித்து ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி வெந்நீருடன் கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
 • நிலவாகை இலைப் பொடியுடன் சம அளவு மல்லி விதைப் பொடி அதற்கு கால் அளவு பெருங்காயப் பொடி சேர்த்து இந்தக் கலவையிலிருந்து 1 தேக்கரண்டி இரு வேளை வெந்நீருடன் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் தீரும்.
 • இளநீர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் மலக்கட்டு நீங்கிவிடும்.
 • பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, முருங்கைக் கீரை, இதில் ஏதேனும் ஒன்றுடன் தேங்காய், சீரகம் சேர்த்து காலை மட்டும் பச்சையாக உண்டுவர மலச்சிக்கல் தீரும்.
 • நாட்டுத்தக்காளி பழம் தினம் இரண்டு உண்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து நிரந்தரத் தீர்வு பெறலாம்.
 • எள் விதையைப் பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து 4 முதல் 6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டுவர மலச்சிக்கல் தீரும்.
 • 2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகி வர மலச்சிக்கல் தீரும்.
 • தேங்காய்ப் பாலுடன் ஏலக்காய் பனைவெல்லம் சேர்த்துப் பருக மலச்சிக்கல் தீரும்.

Sharing is caring!