மஹான்களுக்கு பொன்மழை பொழிந்த மஹாலட்சுமி!

ஆதிசங்கருக்காக, காலடியில் பொன்மழை பெய்ய செய்த மஹாலட்சுமி, வைணவ ஆச்சார்யரான,வேதாந்த தேசிகருக்கும், பொன் மழை பெய்வித்துள்ளாள்.

வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதாக, அவரை, ‘நிகமாந்த மஹா தேசிகன்’ என்றே சொல்வார்கள். ‘நிகமாந்த’ என்றாலும் ‘வேதாந்த’ என்றாலும் ஒன்றுதான். ‘ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு.

குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவரின் அம்சமாக அவர் கருதப்படுகிறார்.  தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிட்சை  எடுத்துத்தான் வாழ்ந்து  வந்தார். பெரியவர்களாக யார் இருந்தாலும், அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள் வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்.

‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர்’ என்றால் யார் உதவி எதுவும் இல்லாமலே, தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த தேசிகன், அப்படி எதையும் சாதித்துவிட முடியாது என்று நிரூபித்துவிட வேண்டும். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரப் பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி மானபங்கப்படுத்த வேண்டும்’ என்று அவருடைய விரோதிகள் நினைத்து, ஒரு சூழ்ச்சி செய்தனர்.

பரம ஏழையான சற்று மந்த புத்தியுடைஒருவன், திருமணம் ஆகாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான்.   தேசிகரின் விரோதிகள், அந்த பையன் மூலம், தேசிகரை அவமானப்படுத்த திட்டமிட்டமிட்டனர்.  ‘இந்தப் பையன் போய், அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை.

இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக்கூடாது. ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்றால், அவராகவே எப்படியோ இவருக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும். அவரால் இப்படிச் செய்யமுடியாது. உடனே, “எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்கள்.

Sharing is caring!