மஹாபாரதத்தில் இப்படியும் ஒரு சம்பவமா?

மகாபாரத யுத்தம் முடிந்து விட்டது.  பீஷ்மர் ,அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரணப்படுக்கையில் கிடக்கிறார்.

ராஜ்ய பதவியில் அமர்ந்து கொண்டிருந்த யுதிஷ்டருக்கு மனதில் அமைதி இல்லை.
நடந்து முடிந்திருந்த யுத்தத்தில் தமது உற்றார் உறவினர்களை, நண்பர்களை, நாட்டு மக்களை என அனைவரையும் இழந்து விட்டு பதவியில் அமர்ந்திருக்கிறோமே என்ற மன உறுத்தலால், அவர் அமைதி இல்லாமல் இருந்தார்.

உடனடியாக கிருஷ்ணரை தேடிச் சென்றார்.  ‘பரமாத்மா, என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. எனக்கு மன அமைதி கிடைக்க, நீதான் ஒரு வழியைக் கூற வேண்டும். உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியே இல்லையே கண்ணா….எனக்கு மன அமைதியைத் தர ஒரு வழியைக் கூறு’  என, கதறினார். .

அதைக் கேட்ட கிருஷ்ணன்,  ‘ யுதிஷ்டிரா, நீ படும் அவஸ்தையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதற்கு என்னால் விடை தர முடியாது. ஆகவே நினைத்த நேரத்தில் தன் உடலைத் துறந்து விட்டு மேலுலகம் செல்லக் கூடிய சக்தி பெற்றவரான பீஷ்மரிடம் சென்று அவரிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்போம்’ என யுதிஷ்டரை அழைத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட யுதிஷ்டரும் கண்ணனுடன் மரணப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் சென்றார். கிருஷ்ணருடன் கிளம்பியவர்களில் வியாச முனிவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒரு சேர தன்னிடம் வந்ததும், அவர்கள் வந்தக் காரணத்தை கேட்ட பீஷ்மர், ‘என்ன சந்தேகம், கேள்’ என,  யுதிஷ்டரிடம்  கேட்டார்.

யுதிஷ்டரும் ‘ தாத்தா, நடந்தது நடந்து முடிந்து விட்டது.ஆனாலும் நான் மன அமைதி இன்றி தவிக்கிறேன். நான் எனக்கு மன அமைதி கிடைக்க வழி தேடி வந்துள்ளேன். ஆகவே எனக்குள்ள சில சந்தேகங்களை நீங்கள் விளக்க வேண்டும். தெய்வங்களிலேயே உயர்வான தெய்வம் எது?

Sharing is caring!