மஹாலட்சுமியின் அருள் பெற்ற மஹான்!

மஹாலட்சுமியின் அருள் பெற்ற, வேதாந்த தேசிகர் பற்றி நேற்று பார்த்தோம். மஹாலட்சுமியின் அருள் பெற்ற மற்றொரு மஹான் வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் முதன்மையானவர். . நாலு வேதங்களுக்கும் சேர்த்து விளக்கம் எழுதியவர்.  ஜோதிடம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம்,  அர்த்த சாஸ்திரம், இலக்கியத்துறை என எல்லாவற்றிலும், கரை கண்டவர்.

 வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலட்சுமியைக் குறித்துக் கடும் தவம் செய்தார்.  தவத்தை பாராட்டி, வித்யாரண்யர்  முன், மஹாலட்சுமி தோன்றினாள்.  ‘இந்த பிறவியில் உனக்குத் செல்வதை அடையும் பாக்கியம் இல்லை. அடுத்த பிறவியில் உனக்கு அருள் செய்கிறேன்’ என கூறி, மஹாலட்சுமி மறைந்துவிட்டாள்.

வித்யாரண்யருக்கு ஆதி சங்கரர் நினைவு வந்தது. ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிறுவன் சங்கரனை முதலை பிடித்தது, அதை பார்த்து, அவரது தாய் கதறினாள்.
‘அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள நீ அனுமதித்தால், முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்றுவிட்டால், அது மறுபிறவி போலாகும். இந்த பிறவியில், முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்தபிறவியில்  அது என்னைப் பாதிக்காது” என்றார் சங்கரர். தாயும் சம்மதிக்க, ஆதி சங்கரர் துறவியனார்.

இதனால், தானும் துறவறம் மேற்கொண்டால், அடுத்த பிறவியாகிவிடும்,. அப்போது, மஹாலட்சுமி நிச்சயம் அருள் செயவாள் என, நினைத்த வித்யாரண்யர், உடன் துறவியானார்.

‘மஹாலட்சுமியே‘ இப்போது துறவியாகி, மறுபிறவி எடுத்துவிட்டேன்,. அருள் செய்ய வேண்டும்’ என, வித்யாரண்யர் வேண்டினார்.
மஹாலட்சுமியும் கருணை மழை பொழிய, வித்யாரண்யரை சுற்றி, தங்கமும் நவநிதியும் கொட்டி கிடந்தது.

வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. ‘அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்து போய்விட்டேன். . வீட்டின் ஏழ்மை போவதற்காக செல்வம் கேட்டேன்.  இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? துறவி, பணத்தைத் தீண்டவே கூடாதே’ என புலம்பினார்.

Sharing is caring!