மஹாளய பித்ரு தர்ப்பணம் மஹா தர்ப்பணம்!

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம், எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று, அவர் நம் முன்னோர்களை அழைத்து, அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று, நம் முன்னோர்களை, அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி, எமதர்மன்  அனுமதிப்பாராம்.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே.  எனவே மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும், முன்னோர்கள், நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.
இந்த பதினைந்து நாட்களும், நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து, நம் முன்னோர்களை வணங்கி வந்தால், நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. இந்த நாட்களில் கொடுக்கப்படும் தர்ப்பணம், மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் கொடுக்காதவர்கள், மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து தங்கள் கடமையை நிறைவேற்றுவர். அதே சமயம், இந்த 15 நாட்களும் தர்ப்பணம் கொடுத்தால் அது நாமும் தெரிந்த, தெரியாத பல முன்னோர்களையும் திருப்தி படுத்துவதால், இதை மஹா தர்ப்பணம் என்கின்றனர்.

Sharing is caring!