மாதவிடாயையும், மூல நோயையும் குணப்படுத்தும் பிரண்டை..!!

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். மாத்திரைகள் இல்லாமல் மருத்துவர் உதவி இல்லாமல் என்று நினைப்பவர்கள் பாரம்பரிய உணவு முறையைக் கடைப்பிடித்தால் போதும். மூலிகை பொருள்களையும் உணவாக்கி அதையே உடலுக்கு மருந்தாக்கி வாழ்ந்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருளில் முக்கியமானவை பிரண்டை.

பிரண்டை என்றால் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மருத்துவர்களும் இன்று பிரண்டையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாலோ என்னவோ மக்கள் பிரண்டையை நோக்கி படையெடுக்கதொடங்கியிருக்கிறார்கள். சாதாரணமாக கிடைக்கும் பிரண்டையின் பயன் பலநூறு நோய்களை வரவிடாமல் தடுக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்.

பிரண்டையில் என்னவெல்லாம் இருக்கு என்பதை தெரிந்துகொண்டால் இனி உங்கள் வீட்டிலும் வாரம் ஒரு முறை பிரண்டை சமையல் இருக்கும்.

பிரண்டை வகைகள்

இதற்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. சாதாரண பிரண்டை, உருட்டுப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, முப் பிரண்டை என்று பல வகைகள் இருந்தாலும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டைதான் நாம் அதிகம் காண்கிறோம். இதைத் தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.

பிரண்டையின் கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். விதைகள் வழவழப்பாக இருக்கும். பூக் கள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை வளர்ப்பதற்கு அதிக மெனக்கெடல் வேண்டியதில்லை. ஒரு பற்றை எடுத்துவந்து வைத்தால் போதும் அவை வேகமாக கொடி போல் பற்றிக்கொண்டு வளரும்.

பிரண்டையின் சாறு உடலில் பட்டால் நமைச்சலும், அரிப்பும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண் டையின் வேரும் தண்டும் மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. பிரண்டை ஆயுர்வேத மூலிகை என்று அழைக்கப்படுகிறது

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஒழுங்கற்ற மாத விடாய், மாதவிடாய்க் காலங்களில் அதிக உதிரப்போக்கு என்று அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இந்தப் பிரச்சனை வராமல் பாதுகாத்துகொள்ளலாம்.

மூல நோய் ஒழியும்

வயிற்றில் செரிமானசக்தி குறைவாகும் போதும் குழந்தைகள் மந்தமாக இருக்கும் போதும் பிரண்டைத் துவையலைக் கொடுக்கலாம். இது செரிமானத்தைத்தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும். மூலநோய், ஆசனவாயில் அரிப்பு, மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்ட றிந்து பிரண்டையை சாப்பிட்டு வந்தால் ஒரே மாதத்தில் மூலநோய் குணமாகும் என்கிறார்கள் அனுபவமிக்க பெரியோர்கள்.

நோய்களை குணப்படுத்தும்

பெரும்பாலானோருக்கு இன்று காணப்படும் முக்கியமான நோய்களான இரத்த அழுத்தம், இதய நோய், நீரி ழிவு கட்டுப்பட பிரண்டை உதவுகிறது.

இரத்தக்குழாய்களில் தேங்கி நிற்கும் கெட்ட கொழுப்புகள் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இதயத்துக்கு இரத்தம் செல்வதைக் குறைக்கிறது. இந்த கொழுப்புகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது பிரண்டை.

Sharing is caring!