மாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்..!!

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சிலவற்றை செய்யக்கூடாதவை பல உள்ளது. பெண்களுக்கு இயற்கையாக மாதத்திற்கு ஒரு முறை மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை சுழற்சி முறையில் மாதவிடாயானது ஏற்படும்.

இந்த சமயத்தில் பெண்ணின் ஆரோக்கியம் காரணமாக சில செய்யக்கூடிய செயல்கள் மற்றும் செய்ய கூடாதது போன்றவை உள்ளது. மேலும், 40 வயதிற்கு அதிகமான பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சனை குறித்து காண்போம்.

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் கடுமையான பணியை செய்துகொண்டு இருக்க கூடாது. இந்த சமயத்தில் கடுமையான பணியை செய்யும் பட்சத்தில் கருப்பை தளர்ச்சியாகி கீழிறங்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

மாதவிடாயின் போது குதித்து விளையாடிக்கொண்டு இருந்தால் கருப்பையின் தசைகள் இறுக்கமாகி, கருப்பை மடிப்பில் இரத்தமானது உறையும். இதுமட்டுமல்லாது கர்ப்பப்பையின் மென்சுவர் விரிவு, உடைவு, கட்டிகள் மற்றும் வீக்கம், திசு சிதைவு போன்ற பிரச்சனையானது ஏற்படும்.

மேலும், மாதவிடாய் தருணத்தில் கர்ப்பப்பைக்கு இரத்த ஓட்டம் கட்டாயமான ஒன்றாகும். இதனால் பெண்களின் பிற உறுப்புகளுக்கு தேவையான ஓய்வை கட்டாயம் வழங்க வேண்டும். இதன் காரணத்தினாலேயே மாதவிடாய் சமயத்தில் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மாதவிடாயின் போது வீட்டினை சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் அறியாத இரத்தக்கசிவின் காரணமாக இரத்த வாடைக்கு பூச்சிகள் தொல்லை தரக்கூடும்.

பொதுவாக பெண்ணின் உடலில் கருப்பையை கருத்தரிப்பதற்கு ஏதுவான “என்டோமெட்ரியம்” என்கிற சவ்வை கரைத்து., பின்னர் அதனை வளர வைத்து தன்னை பக்குவப்படுத்தி கொள்கிறது. இதன் அடிப்படையில் மாதவிடாயின் போது 35 மிலி முதல் 40 மிலி அளவிலான இரத்தப்போக்கானது ஏற்படுகிறது.

மாதவிடாயின் போது பெண்கள் சானிட்டரி நாப்கின்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பருத்திகளால் ஆன துணியை தேர்வு செய்வது நல்லது.

மாதவிடாயின் போது தாம்பத்திய உறவு, மற்றும் பகல் தூக்கம், கண்களில் மையிடுவது, வாசனை திரவியம் உபயோகம் செய்தல், நகம் வெட்டுதல் செய்யக்கூடாது.

மாதவிடாய் சமயத்தில் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கும் பட்சத்தில், இரத்த போக்கானது நின்றுவிடும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மாதவிடாயின் போது வெந்நீரால் தலைக்கு குளிப்பது நல்லது.

Sharing is caring!