மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இறை நாமம் சொல்லலாமா?

வயது வந்த சிறுமியர் முதல் இறுதி மாதவிலக்கு நிற்காத மாதர் வரை, மாதம் ஒரு முறை மாதவிலக்கை சந்திக்கின்றனர். ஹிந்து மத வழக்கப்படி, பொதுவாக, மாதவிலக்கு நாட்களில், பெண்கள் கோவிலுக்கு செல்வதில்லை. தவிர, அந்த நாட்களில் வீட்டிலும், பூஜை அறைக்கு செல்வதை தவிர்த்துவிடுவர்.

இயற்கையிலேயே, ஆண்களை விட பெண்கள் பல்வேறு இயற்கை உபாதைகளுக்கு ஆளாவதாலும், நேரம் காலம் பார்க்காமல் குடும்ப உறுப்பினர்களுக்காக உழைக்கும் பெண்களுக்கு ஓய்வு தேவை என்பதாலுமே, மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு முக்கிய வேலைகள் அளிக்காமல், ஓய்வு தரப்படுகிறது.

மருத்துவ அறிவியல் ரீதியாகவும், இந்த நாட்களில், பெண்கள் இயல்பை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உடல் ரீதியான மாற்றங்களால் உடலளவில் சோர்ந்து காணப்படும் அவர்கள், இந்நாட்களில் மனதளவிலும் தளர்ச்சி அடைகின்றனர்.

ஆன்மிக ரீதியில், பெண்களின் மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு தரப்படும் ஓய்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. நம் முன்னோர்கள் கடைபிடித்த பல நல்ல பழக்க வழக்கங்களை காரண காரியம் ஆராயாமல் இன்றும் நாம் கடைபிடித்து வருகிறோம்.

அது போலத்தான், மாதவிலக்கு நாட்களில் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பதும், அவர்கள், வீட்டில் பூஜை அறைக்கு செல்லாதிருத்தலும் கடைபிடிப்பது நல்லது. அதில் ஆயிரம் அறிவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

Sharing is caring!