மாரடைப்பையே குணமாக்கும் பேரீச்சை

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது. பேரீச்சம்பழம் சிறந்த நன்மைகளைத் தரும் பழவகை.

இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மெட்டபோலிசத்தை அதிகரிக்கச் செய்வதுடன் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுத்தல், கொழுப்பின் அளவைச் சீராக்குதல், இரத்த அழுத்தத்தை குணப்படுத்தல் போன்ற பல நன்மைகளைச் செய்கின்றது.

பேரீச்சம்பழத்தினால் உடலிற்கு கிடைக்கும் நனமைகள்.

1. வலிமையான இதயம்.

இதயத்தை வலு படுத்தி, இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்கு மாலை நேரத்தில் சிறிதளவு பேரீச்சம்பழத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரை காலையில் இந்த நீரை குடித்தால் சிறப்பானது.

2. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

பேரீச்சம் பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம் இருப்பதனால் இரத்த அழுத்தம் உயர்வடைவதை தடுக்கும். அத்துடன் 5-6 பேரீச்சம் பழம் உட்கொள்வதனால் 80 கிராம் மக்னீசியம் உடலிற்கு கிடைக்கின்றது, இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை சீராக்குகின்றது.

3. கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்.

இவை கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இரத்த குழாய்களை சீராக வைத்திருப்பதனால் இரத்த குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

4. பக்கவாதத்தை தடுக்கும்.

பேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் பக்கவாதத்தை தடுக்க உதவுவதுடன் நர்ம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதனால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படாது.

5. இரும்புச் சத்தை அதிகரிக்கும்.

இரும்பு சத்து இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்கி, உடலிற்கு ஒக்ஸிஜன் வழங்குவதற்கும் உதவுகின்றது. பேரீச்சம் பழத்தில் அதிகளவான இரும்புச் சத்து இருப்பதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் இரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டால் கைகொடுக்கின்றது.

100 கிராம் 0.9% இரும்புச்சத்து உள்ளது, அதாவது உடலிற்கு தேவையான் இரும்புச் சத்தில் 11% இதில் காணப்படும்.

6. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

இதில் உள்ள பொட்டாசியம் உடலிற்கு தேவையான நுண்ணங்கிகளை பாதுகாப்பதனால் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

7. மலச்சிக்கலை குணப்படுத்தும்.

தினமும் காலையில் பேரீச்சம்பழம் ஊற வைத்த நீரை அருந்துவதனால் குடலின் தொழிற்பாட்டை சீராக்கி மலச்சிக்கலை குணப்படுத்தும்.

8. உடல் எடையை சீராக வைத்திருக்கும்.’

தினமும் காலையில் வெறு வயிற்றில் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து விடும்.

ஆனால் இதில் சர்க்கரை இருப்பதனால் அதிகளவில் உட்கொள்வதை தவிர்க்கவும்

Sharing is caring!