மார்பக புற்று நோய் சுய பரிசோதனை..!

புற்றுநோயால்  பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை இந்திய  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயால் தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய பாதிப்புகளை அறியாமல் இருக்கும் பெண்கள் இந்நோயைக் கண்டறிந்த சில காலங்களிலேயே இறுதிக் காலத்தை அடைந்துவிடுகிறார்கள் என்பது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிறுவயதில் பூப்படைந்துவிடுவதும், தாமத திருமணமும், குழந்தைப் பேறின்மை கான சிகிச்சையும் பெரும்பாலும்  மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது என்கிறார்கள். மேலும் மெனோபாஸ் நெருங்கிய பெண்கள் பரம்பரை காரண மாகவும் இப்புற்றுநோய் வரலாம் என்கிறார்கள். பெண்கள்  சுய பரிசோதனையின் மூலம்  பரிசோதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 25 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தாங்களாகவே இந்தப் பரிசோத னையை செய்துக்கொள்ளலாம். மாதவிடாய் முடிந்த பிறகு ஒரு வார காலம் கழித்து கண்ணாடி முன் நின்று இரண்டு மார்பகங்களுக்கு நடுவே ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.  மார்பில் கட்டி, வீக்கம், அதீத சுருக்கம், இரத்தக்கசிவு போன்றவை இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படாது என்பது குறிப்பிடத் தக்கது.  மார்பகம் அல்லது அக்குளில் கட்டிகள் இருந்தாலும் அவை வலியை உண்டாக்காது ஆனால் சிறு கட்டிகள், அல்லது  இலேசாக சருமம் தடித்து இருந்தாலும் தாமதமின்றி  பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மார்பு காம்புகளில் இரத்தக்கசிவு இருந்தாலோ,  மார்புகள் வடிவத்தில் மாற்றம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, காம்புகள் உள்ளிழுத்துக்கொண்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சுய பரி சோதனை செய்து கொண்டாலும்  6 மாதங்களுக்கு ஒருமுறை  அல்லது வருடத் துக்கு ஒருமுறையாவது மமோகிராம் என்னும்  எக்ஸ்ரே பரிசோதனையை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இது மார்பக புற்றுநோய் வருவதை முன்கூட்டியே தெரிவித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நோய்களை வந்த பிறகுதான் அறிந்துகொள்ள முடியும். சில நோய்கள் வருவதற்கு முன்பே அறிகுறிகளை காண்பித்துவிடும்.  அப்படியான  கொடுமை யான இறப்பை உண்டாக்க கூடிய மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைக்  கண்ட தும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையலாம்.   வலி வந்த பிறகு நிவா ரணம் தேடுவதை விட வலி வருவதற்கு முன்பு எச்சரிக்கையுடன் இருந்து விடலாம் என்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Sharing is caring!