மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் இவைதான்! ஜாக்கிரதை…!!

நீங்கள் உணவுப் பிரியரா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சிகரமான செய்தி. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சில நம் உயிருக்கே உலை வைக்குமாம்.

அதிலும் நீங்கள் வித்தியாசமான உணவுகளை சுவைக்க விரும்புபவராயின் கவனமாக இருங்கள். நமக்கு கேடு விளைவிக்கும் மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பச்சை முந்திரி

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்களில் பச்சை முந்திரியும் ஒன்று. ஆய்வுகளின் படி, பச்சை முந்திரியை வேக வைத்து உடைத்து சாப்பிடாமல், உலர வைத்து உடைத்து உட்கொண்டால், அதனால் சருமத்தில் அலர்ஜி ஏற்படுவதோடு, அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தை கூட விளைவிக்கும்.

ஏனெனில் பச்சை முந்திரியின் மேல் பகுதியில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த உருஷியோல் என்னும் மோசமான கெமிக்கல் உள்ளது. இதனால் அது சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

காட்டு காளான்

காட்டு காளான்களும் மிகவும் ஆபத்தான உணவுப் பொருளாகும். காட்டுக் காளானை சிறிது கடித்தாலும், அது வாந்தியை ஏற்படுத்தும். அதையே அதிகமாக உண்டால், அது மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

கூவை கிழங்கு

கிழங்குகளில் ஒன்றான கூவைக் கிழங்கும் மிகவும் ஆபத்தான ஒன்று. இந்த கிழங்கை பச்சையாக சாப்பிட்டால், அதில் உள்ள நொதியானது சையனைடாக மாறி, உயிருக்கே உலை வைத்துவிடும்.

வேர்க்கடலை

சிலருக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே அலர்ஜி உள்ளவர்கள் வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

கடல் சிப்பி

கடல் சிப்பியும் அலர்ஜி உள்ளவர்களுக்கு ஆபத்தானது. அதிலும் உங்களுக்கு கடல் சிப்பியால் அலர்ஜி என்றால், அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது கடுமையான அரிப்பு, அடிவயிற்று வலி மற்றும் சில நேரங்களில் வாழ்க்கையே உலை வைத்துவிடும்.

பச்சை பால்

பச்சை பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பச்சை பாலில் மிகவும் ஆபத்தான ஈ-கோலை உள்ளது. இந்த ஈ-கோலை உடலினுள் சென்றால், அது உயிரையே பறித்துவிடும்.

Sharing is caring!