மின்னும் மேனி பொன்னாங்கண்ணி…

உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுவகைகளில் முக்கியமானது முதன்மை யானது கீரைகள். எல்லா சத்துக்களையும் உள்ள டக்கிய கீரை வகைகள் 100 க்கும் மேற்பட்டு இருக்கிறது. அவற்றில் ஒன்று பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரையிலும் பல வகைகள் உண்டு. பச்சை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என்று இருக்கிறது.

பொன்னாங்கண்ணி கீரையை சித்தர்கள் பொன்+ஆம்+காண்+நீ என சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். மின்னும் மேனி பொன் னாங்கண்ணி என்பது போல உடலை தங்கமாக வைத்திருக்கும் கீரை இது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியஸ், பாஸ்பரஸ், புரதச்சத்து, வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன. பொன்னாங் கண்ணி கீரை உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி தருகிறது. வயிற்றுக்கோளாறுகளைச் சரிசெய்கிறது. சரும நோய்க ளைப் போக்குகிறது, வயிற்றுப்புண்களை ஆற்றக்கூடியது, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. கூந்தலுக்கு பொலிவைத் தருகிறது இத்தகைய சிறப்பு மிக்க கீரைவகையில் வேறு என்னவெல்லாம் இருக்கிறது பார்க்கலாம்.

பொன்னாங்கண்ணி அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. பொன் சத்துக்களைக் கொண்டிருக்கும் இந்தக் கீரை உடலில் பித்தநீரை சமன்படுத்துகிறது. கண்கோளாறுகளைச் சரிசெய்து  பார்வையைக் கூர்மையாக்குகிறது. வயிற்றுப் புண்களை குணமாக்குவதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

சிவப்புபொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதோடு சருமத்தையும் பொலி வாக்குகிறது. சரும சுருக்கம் விரைவில் ஏற்படாமல் தடுக்கிறது. அழகையும் சத்துக்களையும் சேர்த் துக் கொடுக்க கூடிய கீரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி துறையில் இருப்பவர்களுக்கு கண் கோளாறுகள் கண்களில் நீர் வடிதல், கண்களில் எரிச்சல், கண்களில் சிவப்பு போன்றவை இயல்பாகவே உண்டாகும். இவர்கள் வாரம் இருமுறையாவது சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைப் பொரி யல் செய்து சாப்பிடலாம். கண் பார்வையில் குறைபாடுகள் இல்லாமல் கண் பார்வை சீராகவும் செய்யும்.

குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்க சிவப்பு பொன்னாங்கண்ணிக்கீரையை சூப்வைத்து கொடுக்கலாம். நினைவாற் றல் பெருகும். குழந்தைகளின் ஆரோக்யமும் மிளிரும். மூல நோயால் அவதியுறுபவர்கள் கீரையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மூல நோய் காணாமல் போகும்.

Sharing is caring!