மீனை இந்த ஒரே ஒரு பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!

சில உண்மைகள் இருந்தாலும் பழங்காலம் முதலே இதில் சில மூடநம்பிக்கைகளும் உள்ளது.

அதாவது சில ஆரோக்கிய உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று முற்காலத்தில் கூறப்பட்டதால் இன்றுவரை நாம் அதனை சாப்பிடாமல் இருக்கிறோம்.

அப்படி நாம் சேர்த்து சாப்பிடாமல் விட்ட உணவுகளில் பாலும், மீனும் ஒன்று.

பாலையும், மீனையும் ஏன் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்பது பற்றி இனி அறிந்து கொள்ளுங்கள்.

பாலும், மீனும் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.

அறிவியல் உண்மை

அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும்.

அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை.

இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை சில சமயம் ஏற்படுத்தலாம்.

ஊட்டச்சத்துக்கள்

இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.

இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்.

எப்போது சாப்பிடக்கூடாது?

மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.

அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

யார் தவிர்க்க வேண்டும்?

ஆயுர்வேதத்தின் இந்த குளிர்ச்சி மற்றும் வெப்ப விளைவு சார்ந்த கருத்தானது பல ஊட்டச்சத்து நிபுணர்களால் ஆதரிக்கப்டுகிறது, இதனால் அவர்கள் இந்த உணவு இணையை எதிர்க்கிறார்கள்.

ஆனால் பல கலாச்சாரங்களில் இந்த உணவுகள் ஆதரிக்கப்படுகிறது, அவர்களின் கருத்துப்படி நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் மட்டும் இந்த உணவுகளை ஒரே நேரத்தில் தவிர்த்தால் போதும் என்று கூறுகிறார்கள்.

Sharing is caring!