மீன் வாங்கப் போறீங்களா? கெட்டுப் போன மீனை கண்டுபிடிக்க ஓர் சூப்பர் ஐடியா..

அன்றாடம் நம்முடைய சமையலுக்கு பயன்படுத்தும் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் ஆகியவற்றை நாம் சந்தைக்கு சென்று வாங்கி வருகின்றோம்.அப்படி வாங்கும் போது ஒருசில காற்கறிகளை உடைத்து பார்த்தும், தேங்காயாக இருந்தால் அதை ஆட்டி பார்த்தும் வாங்குவோம்.ஆனால், மீன் வாங்கும் போது, நல்ல மீனாக பார்த்து எப்படி வாங்குவது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். மீன் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

மீன் மார்கெட் சென்று மீன் வாங்கும் போது, அந்த மீனை நாம் பார்க்கும் போதே புதிய மீனை போன்று பிரஷ்ஷாக இருந்தால், அது நல்ல மீன்.
மீனின் கண்களைப் பார்க்கும் போது, அது தெளிவாக இருந்தால், அது நல்ல மீன். அதுவே அந்த மீனின் கண்கள் மங்கலாக இருந்தால், அது கெட்டுப் போன மீன்.
நாம் வாங்கும் மீன்களில் மீது ஏதேனும் காயங்கள் இருந்தால், அந்த மீன் கெட்டுப் போனது.மீன்களின் செவுளைத் திறந்து பார்க்கும் போது, அது செந்நிறத்தில் இருந்தால் நல்ல மீன். அதுவே சாம்பல் நிறத்தில் இருந்தால், அது கெட்டுப் போன மீன்.
மீனின் மேல் செதில்கள் அதிகமாகவும், முள் அதிகமாகவும் இருந்தால், அந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும்.மீனைத் தொட்டு பார்க்கும் போது, அது நொளநொளவென்று இருந்தால், அந்த மீன் கெட்டுப் போனது.

Sharing is caring!