முகப்பருக்களை தடயம் இல்லாமல் போக்கும் வீட்டு மருத்துவம் !

முகப்பருக்கள் மிகுந்த தொந்தரவை கொடுக்க கூடிய ஒன்று, இந்த பருக்கள் இள வயதுடைய ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் வரக்கூடியது.  பெண்களின் மதவிடாய் காலங்களில், ஊட்டச்சத்து குறைபாட்டால், மன அழுத்தம், வளர்சிதை மாற்றம் போன்ற பல காரணங்களால் முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த பருக்களை கட்டுக்குள் கொண்டு வருவதும், இதனால் ஏற்படும் தழும்புகளை மறைப்பதும் அவ்வளவு எளிதானதல்ல, இத்தகைய பிரச்னைகளை போக்கக் கூடிய, வீட்டில் எளிதாக செய்யக்கூடிய வீட்டு மருத்துவத்தை பற்றி பார்க்கலாம்.

ஆப்பிள் செடார் வினிகர்

ஆப்பிள் செடார் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் உள்ள பி ஹச் அளவை சமன் செய்து, முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.ஒரு பங்கு ஆப்பிள்செடார் வினிகரை, மூன்று பங்கு நீரில் கலந்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். நன்கு காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகப்பருகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

இலவங்கப்பட்டை, தேன் கலந்த முகப்பூச்சு

இலவங்கப்பட்டையில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க கூடிய ஆன்டி பாக்டீரியல் அதிக அளவில் உள்ளது. அதேபோல், தேனில் உள்ள நுண்ணுயிர்க்கொல்லி தன்மையான ஆன்டி-பையொடிக் உள்ளதால் முகப்பருக்களை வடு இல்லாமல் மறைத்து விடும் . இரண்டு டீஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலந்து முகப்பருக்களின் மேல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவி காயவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி முகப்பூச்சு


ஹார்மோன் மாற்றத்தினால் உண்டாகும் முகப்பருக்களை பப்பாளி முகப்பூச்சின் மூலம் எளிதில் போக்கி விட முடியும். மேலும் இதனால், முகத்தில் உள்ள இறந்த செல்களை  நீக்கி,  முகத்தில் எண்ணெய் வடிவதை குறைக்கும். ப‌ப்பாளி முகப்பூச்சு செய்ய ஒரு பப்பாளி பழத்தை எடுத்து கூல் செய்து கொள்ள வேண்டும், பின்னர் அதனை நேரடியாக முகத்தில் பூசி காய்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

டூத் பேஸ்ட் மருத்துவம்

டூத் பேஸ்டில் பாக்டிரியாக்களை தடுக்க கூடிய ஆன்டி பாக்டீரியா கலக்கப்படுவதால், இது முகப்பருக்களை சரி செய்ய மிக உதவியாக இருக்கும், சிறிது டூத் பேஸ்டை காட்டனில் தடவி முகப்பருக்களின் மேல் வைக்க வேண்டும் .இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து காலையில் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

தேயிலை எண்ணை 

தேயிலை எண்ணையில் ஆன்டி பாக்டீரியல் தன்மை  நிறைந்திருப்பதால் , முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை தடுக்கிறது.  மேலும், முகத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்குகிறது. காட்டனில் சிறிய அளவு தேயிலை எண்ணையை தடவி முகப்பருக்களின் மேல் இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோலில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யக்கூடியது. எனவே வாழைப்பழ தோலை முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகப்பரு தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இது முகத்தில் புதிய செல்களின் உருவாக்கத்தை ஊக்குவித்து முகம் பளபளப்படைய உதவுகிறது. இதற்கு,  ஒரு வாழைப்பழத்தின் தோலை எடுத்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கற்றாழை சாறு

கற்றாழை ஜெல் முகப்பருக்களை குறைப்பதில் பெறும் பங்கு வகுக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படியாக இருப்பதால் சரும நோய்களுக்கான மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது கற்றாழை ஜெல்.  மேலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் போக்கும் தன்மை கொண்டது கற்றாழை ஜெல். சிறிது கற்றாழை ஜெல்லை முகத்தில் பூசி சில மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு

வைட்டமின் சி அதிகளவில் கொண்டுள்ள எலுமிச்சை, சருமத்திற்கு பொலிவை கொடுப்பதுடன், சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை போக்குகிறது.  எலுமிச்சையின் சாற்றை எடுத்து முகப்பருவின் மேல் பூச வேண்டும். இவ்வாறு எலுமிச்சை சாற்றை பயன்படுத்துவதனால் முகப்பருக்களை எளிதில் போக்க முடியும்.

பூண்டு மருத்துவம்

சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கூடிய தன்மை கொண்ட பூண்டை பயன்படுத்தி, முகப்பரு பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும். மூன்று பல் பூண்டை அரைத்து , கற்றாழை சாறுடன் கலந்து முகப்பருக்களின் மேல் பூச வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செய்வதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

Sharing is caring!