முக அழகை கெடுக்கும் கரும்புள்ளியை போக்க எளிய வீட்டு மருத்துவம்

முக அழகை கெடுக்க கூடிய வகையில் கரும்புள்ளிகள், கருவளையம்  போன்றவற்றை தடுக்கும் வீட்டு மருத்துவம் பற்றி பார்க்கலாம்.

பப்பாளி மாஸ்க்:

பப்பாளியில் உள்ள பபைன் என்னும் நொதிப்பொருள் முகத்திற்கு பொலிவூட்டக்கூடியது. பப்பாளி மாஸ்க் தயார் செய்ய ஒரு பப்பாளி பழத்தை கூளாக்கி கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகப்பூச்சு தயார் செய்ய வேண்டும். உலர்ந்த சருமமாக இருந்தால், தயார் செய்த கலவையுடன் சிறிது பால் சேர்த்து முகத்தில் பூசலாம்,  எண்ணெய் பசை அதிகம் வலியும் சருமமாக இருந்தால், பப்பாளி, தேன் கலவையுடன்  எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இந்த மாஸ்கை அடிக்கடி முகத்தில் பயன்படுத்துவதனால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், கரு வளையங்கள் போன்றவை விரைவிலேயே மறைந்து முகம் நல்ல பளபளப்பை அடையும்.

கற்றாழை மாஸ்க்:

கற்றாழை ஜெல், வைட்டமின் E எண்ணெய்,  எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில்  மாஸ்க் போல போட வேண்டும். அது காய்ந்த உடன் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் நல்ல பலனை அடைய முடியும். வைட்டமின் E எண்ணெய்  சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கிறது. எலுமிச்சை சாறு கரும்புள்ளிகளின் நிறத்தை மாற்ற உதவுவதுடன் இறந்த செல்களை நீக்குகிறது.  இதனால் முகம் நல்ல பொலிவை பெறும்.

போதுமான அளவு நீர் அருந்துவது:

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதனால், உடலில் உள்ள  நச்சுகள் வெளியேறுகிறது. மேலும்  போதுமான தண்ணீர் குடிப்பது தெளிவான, மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தைன் பெற உதவுகிறது.  மேலும், மது, சர்க்கரை பானங்களை தவிர்ப்பது சரும கோளாருகள் வருவதை குறைக்கிறது.  அதோடு முகத்தை குறைந்தது 2 முறை சுத்தமான நீரில் கழுவுவது, முகத்தில் இருந்து தூசி மற்றும் அழுக்கை நீக்க உதவும்.

மோர் முகப்பூச்சு

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. பருத்தி பஞ்சை  மோரில் நனைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் வைக்க வேண்டும். காய்ந்த உடன்  சுத்தமான நீரில் முகத்தை கழுவுவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவிலேயே மறைந்து விடும்.

தயிர் மற்றும் எலுமிச்சை மாஸ்க்:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கரும் புள்ளிகளை போக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். இதனால் முகம் மென்மையாகவும், ஒளிரும் தன்மையுடனும் மாறிவிடும்.  மேலும் முகத்தில் இருந்து இறந்த செல்களையும், அழுக்கையும் அகற்றுவதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த கலவை பயன்படும்.

Sharing is caring!