முடி கொட்டுவதற்கான பிரச்சினை என்ன?

முடி கொட்டுதல் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடுதான். அன்றாட ஆரோக்கிய மற்றும் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை ஏற்படுதல் போன்ற தொல்லைகளுக்கு மற்றொரு முக்கியமான காரணம் பரம்பரை பிரச்சினையாகும். தந்தை வழியில் அல்லது தாய் வழியில் இந்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் ஜீன் மூலம் பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.

முடி உதிர்தலும் மன அழுத்தமும் நேரடியாக தொடர்பு கொண்டன. கவலை , அளவுக்கதிகமான யோசனை போன்ற விஷயங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பெரிய அளவு பாதிக்கும். உடலுக்குத் தேவையான தூக்கம் கிடைக்காத போதும் முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவு காணப்படும்.

தேவையான அளவு சிறிய வெங்காயங்களை உரித்து வைத்துக் கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த விழுதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து தலை மற்றும் முடிக்குப் பூசவும். இந்த வழியை மாதம் 1 முதல் 2 தடவைகள் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.

கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும்.

ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு செம்பருத்திப் பூவை பறித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதைத் தலை முடிக்குத் தினம் தேய்த்து வரத் தலைமுடி செழிப்பாக வளர தொடங்கும்.

கற்றாழையில் உள்ள சதைப்பிடிப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாதிரி ஜெல் மாதிரியான வழவழப்புத் தன்மை கொண்டது. இதனைத் தலை மற்றும் மயிர்க்கால்களில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துக் கொள்ள வேண்டும். கற்றாழை தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும்.

Sharing is caring!