முடி வளர்ச்சியை தூண்டும் வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை !

அனைவரது வீட்டின் சமையல் அறையிலும் இடம் பிடிக்க கூடிய உணவு பொருள்தான்  வெங்காயம்.   சமையலில் சுவைக்   கூட்டும் வெங்காயம் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என ஆய்வு முடிவுகள் கண்டறிந்துள்ளன.   வெங்காயத்தை எவ்வாறு முடி வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த முடியும் என்பதை பார்க்கலாம்.  வெங்காயத்தில் உள்ள தாதுக்கள், சல்பர்  போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சத்துக்களாக இருக்கின்றன.

வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவது உச்சந்தலையின் pH ஐ சமன் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உச்சந்தலையில் சிறந்த இரத்த ஓட்டம் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, உங்கள் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை :

தேவையான அளவு தேங்காய் எண்ணெயுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை  சேர்க்கவும் . கலவையை சூடாக்கவும், கறிவேப்பிலை கருப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கிய பின்னர், கலவையை வடிகட்டி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றிலிருந்து எண்ணெயைப் பிரிக்கவும். இப்போது இந்த எண்ணெயை சேமித்து, உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு முன் சில மணிநேரங்கள் அல்லது  இரவு முழுவதும் முடியில் பூசி ஊறவைக்க வேண்டும் .

Sharing is caring!