முட்டை சாப்பிடலாமா?

முட்டை சாப்பிடுவதனால் பலதரப்பட்ட உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என பொதுவான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் முட்டை நமது உடலுக்கு தேவையான சத்துக்களை அதிகமாக தன்னுள் கொண்டுள்ளது. புரதம் நிறைந்த முட்டை நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. முட்டையில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

பொட்டாசியம், நியாசின், ரிபோஃபுளோவின், மெக்னீசியம், சோடியம் ஆகிய சத்துக்கள் முட்டையில் உள்ளன. மேலும், கால்சியம் , தாமிரம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் வைட்டமின் பி 6 மற்றும் பி 12, ஃபோலிக் அமிலம், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் தியாமின், வைட்டமின்கள் ஏ, டி போன்ற சத்துக்கள் மஞ்சள் நிற கருவில் அதிக‌ அளவு  உள்ளது. இதோடு உடல் வளர்ச்சிக்கு தேவையான  புரதங்களையும் தன்னுள் கொண்டுள்ளது முட்டை.

மேலும், ஒமேகா -3, மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்துக்கும், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் (BP) தொடர்பான பக்கவிளைவுகளை எதிர்த்து போரடக்கூடிய சக்தியையும் உடலுக்கு கொடுக்கிறது.

பொதுவாக, உடலில் கொலஸ்ட்ரால் பிரச்னை வராமல் இருக்க முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கிற கருத்து பரவி வருகிறது. உண்மை என்னவென்றால், கொழுப்பு சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை  டிரான்ஸ் கொழுப்புகளாகும். இவை பெரும்பாலும் ஜங் புட், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள்  போன்றவற்றில் தான் அதிகம் இருக்கும். ஒரு நாளில் 300mg அளவிற்கு கொழுப்பினை நமது உணவில் சேர்த்து கொள்ளலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஆனால் ஒரு முட்டையில் 183 mg கொழுப்பு மட்டுமே உள்ளது.

Sharing is caring!