முட்டை வெள்ளை பகுதியை சாப்பிட்டால் ஆபத்தா?

சில உணவுகளை நாம் சாப்பிட்டால் உண்மையிலே ஆபத்துகள் உண்டாகும். சாப்பிட கூடிய உணவின் பதம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அந்த வகையில் முட்டையை பற்றிய சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளது. முட்டையில் இருந்து கோழியா? இல்லை கோழியில் இருந்து முட்டையா? இப்படி ஏடாகூடமான கேள்விகள் முட்டையை சுற்றி இன்றும் வலம் வருகின்றன.

அதே நேரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாது. வெள்ளையை சாப்பிட கூடாது என்கிற பல புதிர்களும் உள்ளன.

இவை அனைத்திற்கும் தெளிவான புரிதலை கொண்டு வரவே இந்த பதிவு.

பல்வேறு ஆரோக்கியங்கள் முட்டையில் நிறைந்துள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான்.

குறிப்பாக பிராய்லர் முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. முட்டையின் சத்துக்கள் என்பது மஞ்சள் கரு, வெள்ளை பகுதி என தனி தனியாகவே பார்க்கப்படுகிறது.

முட்டையின் மஞ்சள் கரு என்பது மையத்தில் இருப்பவை. இவற்றில் வைட்டமின் எ,டி, ஈ, பி6, பி12, கே, போலேட், கால்சியம் மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும்.

இவை உடல் ஆரோக்கியம், முடியின் வளர்ச்சி, சருமம் போன்ற அனைத்திற்கும் பயன்படுகிறது.

வெள்ளை பகுதி

சத்துக்கள் மஞ்சள் கருவை போன்றே முட்டையின் வெள்ளை பகுதியிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முக்கியமான புரதசத்து இதில் தான் நிறைந்துள்ளது. மேலும், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவையும் உள்ளது. கூடவே இதில் குறைந்த கலோரிகளே உள்ளன. ஆதலால் எளிதாக இது எடையை குறைக்க உதவும்.

பாதிப்புகள்
  • என்னதான் எண்ணற்ற நன்மைகள் முட்டையின் வெள்ளை பகுதியினால் கிடைத்தாலும், இவற்றால் சில பாதிப்புகளும் உண்டாகின்றன.
  • முதலாவதாக, இதிலுள்ள ஆல்புமின் என்கிற புரதசத்து சிலரின் உடலில் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.
  • முக்கியமாக வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் முதலிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.
  • முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதால் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா தான்.
  • இவை முட்டையின் வெள்ளை பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆதலால், இதை நன்றாக சமைத்து சாப்பிடவில்லை என்றால் குடல் சார்ந்த பிரச்சினைகள் கூட ஏற்படும்
  • முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிடும் சிலருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காரணம் இதிலுள்ள அதிக அளவிலான புரதசத்து தான்.
  • 0.6 – 0.8 கிராம் அளவிலான புரதசத்து தான் ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும். அதற்கு மீறி சாப்பிட்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகும்.

Sharing is caring!