முதுகுவலியை நிரந்தரமாக விரட்ட வேண்டுமா?

இன்றைய கால காலட்டத்தில் வேலைக்கு செல்லும் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளுள் முதுகுவலி முக்கிய இடத்தை பெறுகின்றது.

நிறைய நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது, கம்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடுவது ஆகியவை தான் முதுகுவலி உண்டாக மிக முக்கியக் காரணமாகும்.

அதுமட்டுமின்றி 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும்.

இது இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்சினைகள் உண்டாகும்.

இதிலிருந்து விடுபட பூண்டு பெரிதும் உதவி புரிகின்றது. இதனை பாலுடன் சேர்த்து குடிப்பதனால் முதுகுவலி பறந்து விடுகின்றது.

அந்தவகையில் தற்போது இந்த பூண்டு பாலினை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • பால் – 300 மில்லி
  • பூண்டு – 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)
செய்முறை

முதலில் பாத்திரத்தை நன்கு கழுவி விட்டு, அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பாலை சூடேற்றுங்கள்.

பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடுங்கள்.

மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

இப்படி காய்ச்சிய பூண்டப்பாலை தினமும் குடித்து வர வேண்டும். இதை இரவிலோ அல்லது காலையிலோ தினமும் குடித்து வந்தால், இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்லும்.

நன்மைகள்
  • இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும்.
  • பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிக அளவில் உள்ளன. அதனால் அழற்சி பிரச்னை உள்ளவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும் இதை குடிக்கலாம். இந்த சுவையை கொஞ்சம் அதிகரிக்க கொஞ்சம் தேன் கலந்தும் பருகலாம்.

Sharing is caring!