முந்திரி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?

நம் வீட்டில் தயாராகும் கேசரி, பாயாசம் போன்ற இனிப்பு வகைகளில் முந்திரியை தேடுபவர்கள் ஏராளம்.

இதில் சத்துக்கள் அதிகம் என்றாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை போல அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது தீமைகளையும் ஏற்படுத்துகிறது.

அதிகளவான சோடியம்

ஒருவருக்கு ஒருநாளைக்கு 1,500 மில்லிகிராம் சோடியம் தேவைப்படும், ஒரு அவுன்ஸ் உப்பில்லாத முந்திரியில் 5 மில்லிகிராம் சோடியமும், ஒரு அவுன்ஸ் உப்புள்ள முந்திரியில் 87 மில்லிகிராம் சோடியமும் உள்ளது.

எனவே அளவுக்கு அதிகமாக உப்புள்ள முந்திரியை உட்கொண்டால், சோடியம் அதிகரிப்பதால், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் அல்லது இதய நோய்க்கு வழிவகுக்கிறது.

அதிகளவான மக்னீசியம்

ஒரு அவுன்ஸ் முந்திரியில் 82.5 மில்லிகிராம் மக்னீசியம் உள்ளது, முந்திரியில் உள்ள மக்னீசியம் நீர்பெருக்கி மருந்துகள், தைராய்டு மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தக்கூடியவை.

உடற்பருமனை அதிகரிக்கும்

ஒரு அவுன்ஸ் முந்திரியில் 163 கலோரிகள் மற்றும் போதுமான நல்ல அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. நல்ல கொழுப்புக்களைக் கூட ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும்.

தலைவலியை அதிகரிக்கும்

இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும் அமினோ அமிலங்களான பீனில்எத்திலமைன் மற்றும் டைராமைன் போன்றவை முந்திரியில் உள்ளது. ஆனால் யார் இதற்கு சென்சிடிவ்வானவர்களோ, அவர்களுக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்திவிடும்.

சிறுநீரக கற்களை உருவாக்கும்

கால்சியம் உறிஞ்சுவதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்ஸலேட் உப்புக்கள் இதில் உள்ளன. எனவே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாவிட்டால், சிறுநீரகங்களில் கற்களாக உருவாகும்.

Sharing is caring!