முன்னோர்களை குளிர்விக்க இதோ எளிமையான சிறந்த வழி!

நேரமின்மை அல்லது வசதியில்லாததால், மஹாலய  பட்ச நாட்களில் முன்னோருக்கு திதி கொடுக்க முடியாது. தானம் எதுவும் செய்ய முடியாது என்ற வருத்தம் சிலருக்கு இருக்கும். இவர்கள் கவலைப்பட தேவையில்லை.

மஹாளய பட்ச நாட்களில், இவர்கள், பசு மாட்டுக்கு உணவளிதால் போதுமானது; அதிலும் கன்றுடன் உள்ள பசுவுக்கு வழங்கும் உணவு, பெரும் பலனை தரும்.

பசுவுக்கு தினமும், ஒரு கட்டு அருகம்புல் அல்லது அகத்திகீரை வழங்கினாலே போதும். பசுவுக்கு அன்னம், பழங்கள் அளிப்பது பெரும் சிறப்பு. அதிலும், வாழைப் பழங்கள் கொடுத்தால், மகத்தான பலன் கிடைக்கும்.

பசுவின் உடலில், முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்கின்றனர். பசுவுக்கு அளிக்கப்படும் உணவு, இவர்களை சென்றடைகிறது. பசுவுக்கு உணவளிப்பது, முன்னோர்களை மகிழ்விக்கும்.

அதனால், மஹாளய பட்ச நாளில், தினமும், குறைந்தது ஒரு பசுமாட்டுக்கு நம்மால் முடிந்த உணவை வழங்குவோம், முன்னோர்களின் அருளை பெறுவோம்.

Sharing is caring!