முருங்கைக்காயை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா??

தமிழர்களின் உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான்.

பிடிக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் முருங்கைக்காயை யாரும் தவிர்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் அதில் நிரம்பியிருக்கும் சத்துக்கள் தான்.

நமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது. ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை.

இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகள்

அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால்

ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அலர்ஜிகள்

முருங்கைக்காயில் உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.

கர்ப்பிணிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.

முற்றிய முருங்கை

இதில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிவிட்டால் அதன் விதையை மட்டும் பிரித்தெடுத்து வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, பாலில் கலந்து குடிக்க உடல் வலுப்பெறும்.

ஆனால் முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.

குறிப்பு

ஆரோக்கியம் அதிகம் என்று அதிகமாக சாப்பிட்டால் பெண்களை விட ஆண்களுக்கு பாதிப்பு அதிகம். எதையும் அளவாக எடுத்து கொண்டால் உணவே மருந்து. அளவை மீறினால் அதுவே விஷமாக மாறிவிடும்.

Sharing is caring!