முளைக்கட்டிய பயறு… சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்

தஞ்சாவூர்:
சர்க்கரை நோய் இதுதான் மக்களில் பாதிபேரை பயமுறுத்தும் நோயாகும். இதை கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள கைவசம் எளிமையான மருந்து இருக்கு. என்ன தெரியுங்களா?

பாசிப்பயறு சிறிதளவு எடுத்து கொள்ளவும். அதை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து மறுநாள் காலை நீரை வடித்து ஒரு கைத்தறி துணியில் கட்டி வைக்கவும். குறைந்தது எட்டு மணி நேரம் கழித்து அவிழ்த்து பார்க்கும் பொழுது அது நன்றாக முளைக்கட்டி இருக்கும்.

இந்த முளைக்கட்டிய பயிரை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதைக் காணலாம். மிகவும் ஆரோக்கியமான ஒன்றும் கூட.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!