மூட்டுவலியை விரட்ட வேண்டுமா?

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் ‘மூட்டுவலி‘ ( Arthritis ) என்று சொல்கிறோம்.

உடற்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள் ஆகும்.

மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிகவேலை கொடுத்தால், மூட்டில்நீர் கோர்த்து, வீங்கி மூட்டுவலியை அதிகப்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட சில இயற்கை பானங்கள் பெரும் உதவி புரிகின்றது. தற்போது அந்த இயற்கை பானங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • அன்னாசி ஜூஸ் எலும்பு இணைப்புகளில் உள்ள அமன்மையான திசுக்கள், ஜவ்வுகளில் உண்டாகின்ற தொற்றுக்கள், வலி, தேய்மானம் மற்றும் மூட்டுப்பகுதிகளில் ஏற்படுகின்ற வீக்கங்கள் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த தீர்வு.
  • ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி எலும்புகள் மற்றும் மூட்டுப்பகுதிகளில் உள்ள தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கிறது.
  • எலும்புத் தேய்மானம், வலி, எலும்பில் ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றுக்கு பட்டை தண்ணீர் மிகத் தீர்வாகும். ஏனெனில் இது இது நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது நம்முடைய மூட்டுப் பகுதிகளில் ஏற்படுகின்ற தேய்மானத்தைத் தடுக்கின்றது.
  • தேனை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து கலந்து தேய்த்து வந்தீர்கள் என்றால் அதைவிட மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
  • ஓட்ஸை அரைத்தும் மூட்டுவலி உள்ள இடங்களில் எலும்புத் தேய்மானங்கள் உள்ள இடங்கள், வீக்கம் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து, நன்கு உலர்ந்த பின் அதை வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

Sharing is caring!