மூட்டு வலியை போக்க முத்தான தீர்வு!

அக்காலத்தில் கால் வலி, மூட்டு வலி என்று வயதானவர்கள் தான் சொல்லிக்கொண்டு இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது வந்தது.
50 வயதை கடந்த அனைவருக்கும், மூட்டு வலி என்பது சாதாரணமான ஒன்று.  ஆனால் தற்போது 30 கடந்து விட்டாலே வாழ்கை  அனுபவம்  பெறுகிறோமோ இல்லையோ அதிகமாக  வலிகளை பெற்று கொள்கிறோம். எத்தனை பணம் செலவலித்தாலும் பரவாயில்லை, இந்த மூட்டுவலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறோம்.

மூட்டுவலிக்கான காரணங்கள்:

1) எலும்பு தேய்மானம் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
2) தவறான உணவு முறை.
3) உடல் எடை அதிகரிப்பதால் இளைஞர்களுக்கு கூட மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது. பெருபான்மையானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கிய காரணம்.
4) கால்சியம் சத்து குறைவு, நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருத்தல்.
5) நம் உடலில் தோன்றும் இரசாயன மாற்றங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
6) தினசரி உடற்பயிற்சி இல்லாமை இளவயதில் மூட்டு வலி வரவதற்கு முக்கியமான காரணம்  என ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபடித்து இருக்கிறார்கள்.
7) காலை கடனை கழிக்கும் முறையும் மூட்டுவலி வர காரணமாக கூறப்படுகிறது

மூட்டுவலியின் பாதிப்புகள்:

மூட்டுவலியால் தினசரி அடிப்படை வேலைகளான , சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது மிகவும் கடுமையானதாக ஆகி விடுகிறது.
மூட்டுவலியால் நடப்பதற்கும், படிகளில் ஏறுவதற்கும்,மிகவும் சிரம்பட வேண்டியது இருக்கும்.
மூட்டுவலி வராமல் தடுக்க:
நாம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்று கொண்டாலே போதும்.
நன்கு நேராக ,நிமிர்ந்து உட்கார, நிற்க பழக வேண்டும்.
கூன்  போட்டப்படி அமர்வதால் பெரும்பான்னமயானவர்களுக்கு பலமிழக்கின்றன.
நினைக்கும்போது பாதங்களைசற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சம்மாக பரவும்.
முதுகு தண்டை நிமிர்த்தியபடி அமர்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
குதிகால் செருப்பு பயன்படுத்துவதை பெண்கள் தவிர்பது நல்லது.

நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போது அதற்கென உள்ள செருப்புகளை உபயோக்க பழக வேண்டும்.
வருடத்திற்கு  ஒருமுறை செருப்புகளை மாற்ற வேண்டும்.
எந்த வேலையாக  இரு ந்தாலும் ஒரேடியாக செய்யாமல் சிறிது நேரம் ஓய்வதெடுத்து செய்யலாம்.
அதிக நேரம் அமர்ந்தடி பணியாற்றுபவர்கள் அவ்வப்போது எழுந்து நடந்த பிறகு தொடரலாம்.
அமரும்  இருக்கைகள் மிருதுவாக இருந்தால் நல்லது.
உறக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும்  இருக்க செய்கிறது.   ஒரு மனிதனுக்கு 7முதல்   9  மணி  நேரம் வரை உறக்கம் தேவை.

Sharing is caring!