மூளைக்கு ஆபத்து…நீண்ட நேரம் உட்கார்ந்தால் ஆபத்து

நீண்டே நேரம் அசைவில்லாமல் அமர்ந்திருந்தால் மூளைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ குழு எச்சரித்துள்ளது.

நீண்ட நேரம் அசைவின்றி அமர்ந்திருப்பதையே பழக்கமாகக் கொண்டிருந்தால், எடை அதிகரிப்பு, முதுகு வலி, மறதி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என அணையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆரோக்கியமான இளைஞர்கள் 15 பேரை கொண்டு ஆய்வு ஒன்று செய்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார். எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே இருப்பதால் மூளையின் இரத்தவோட்டம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டது. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்திருந்து சிறிது நேரம் உலவினால்கூட இந்த பாதிப்பைத் தவிர்க்கலாம். அதற்கு வெறும் 2 நிமிடம் எழுந்து பின்பு உட்கார்ந்தால், இரத்தவோட்டம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாள் ஒன்றுக்கு தொடர்ந்து 15 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உட்கார்ந்திருக்கும் இளைஞர்களுக்கு அல்சைமர் என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால் மூளை உயிரணுக்களுக்குத் தேவையான உயிர் வாயு, ஊட்டச் சத்து ஆகியவை மூளைக்கு சென்றடையாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!