மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 5 அபாயங்கள்!

அதிரிபுதிரியான இந்த அவசர உலகில் நாம் அனைத்தையும் உடனே செய்துவிட வேண்டும் அனுபவித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ஓடிக் கொண்டிருப்பதால் தான். மரணத்தையும் மிக வேகமாக எட்டிவிடுகிறோம். இன்று எங்காவது ஒருவர் இயற்கை மரணம் அடைந்தார் என்பதை கேட்பதே ஆச்சரியம்.

அந்தளவு நோய்களின் தாக்கம் மனிதர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மாதம் ஒரு புதிய நோய் அல்லது வைரஸ் தாக்கம் உலகில் கண்டறியப்படுகிறது. இதற்கு காரணம் நாம் மாற்றிக்கொண்ட உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை. மைக்ரோவேவ் ஓவனில் சமைத்து உண்பதால் நேரம் மிச்சம் ஆகிறது என நீங்கள் எண்ணலாம்.ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்! ஆனால், இது உங்கள் உயிரையும் மெல்ல, மெல்ல குடிக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். இனி, மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால் உண்டாகும் 5 அபாய நோய் தாக்கங்கள் பற்றி காணலாம்…

தூக்கமின்மை:அன்றாடம் மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த உணவை உண்டு வருவதால், மூளையின் செல்களில் சேதம் உண்டாகிறது. மேலும், இது தூக்கத்தின் சுழற்சியை கெடுத்து, தூக்கமின்மை உண்டாக காரணியாய் திகழ்கிறது.

மயக்கம்:மேலும், மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால், உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து வெறும் கலோரிகள் மட்டுமே தங்குகின்றன. இதனால், நாள்பட உடல் பருமன் அதிகரித்தல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

புற்றுநோய்:மைக்ரோவேவ் ஓவனில் இருந்து வெளியாகும் ரேடியேஷன் மனித உடலில் புற்றுநோய் செல்கள் உண்டாக காரணியாக இருக்கின்றன. இதனால் நாள்பட புற்றுநோய் தாக்கம் உண்டாகம் அபாயமும் இருக்கிறது.ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ்:மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால் உணவில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அழிக்கப்படுகின்றன. இதனால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவும், இதய நோய்கள் அதிகரிக்கும் அபாயமும் இருக்கின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு:நீங்கள் மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால் உண்டாகும் பெரிய அபாயமே இது தான். ஆம், மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையும் கூட இல்லாமல் போய்விடுகிறது. இதை நீங்கள் நேரடியாக உணர முடியும்.

எச்சரிக்கை!எனவே, இனிமேல், தினமும் மைக்ரோவேவ் ஓவனில் சமைத்து உண்பதை மற்றும் வெளியிடங்களில் மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கப்படும் உணவுகளையோ அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது உடனே பக்கவிளைவுகளை வெளிக்காட்டாது. நாள்பட, நாள்பட தான் இதன் தாக்கம் தென்படும்.

Sharing is caring!