மொட்டை விழுற தலையில அடர்த்தியா முடி வளரணுமா?

இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எல்லாருக்கும் ராபுன்சல் மாதிரி அழகான அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டும் என்பது கனவாகவே அமைகிறது.

ஆனால் அப்படிப்பட்ட கூந்தல் சாத்தியமா? கண்டிப்பாக இந்த ஒரு பொருளை மட்டும் கையில் எடுங்கள். இந்த எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே போதும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற இயலும்.

கருஞ்சீரக எண்ணெய்

இந்த கருஞ்சீரக எண்ணெய் உங்கள் கூந்தலை வலிமையாக, அடர்த்தியாக வைக்க உதவுகிறது. எனவே இனி இநத எண்ணெய்யை உங்கள் கூந்தல் பராமரிப்பில் சேர்த்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்பொழுது இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பயன்கள்
 • இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி கூந்தலை வலிமையாகவும், அடர்த்தியாகவும் வைக்க உதவுகிறது.
 • ஆரோக்கியமான வேர்கால்களை உருவாக்கி கூந்தலின் வேர்களை வலிமையடைய செய்கிறது.
 • மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் போன்றவை தலையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.
 • இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது.
 • கூந்தல் உதிர்வை தடுக்கிறது இளநரையை தடுத்து கூந்தலை கருமையாக்குகிறது.
 • கூந்தலை மென்மையாக அலைபாயச் செய்கிறது. கூந்தல் பாதிப்பு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
பயன்படுத்தும் முறை
 • ஒரு சிறிய பெளலில் கருஞ்சீரக விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
 • இதனுடன் சிறுதளவு விளக்கெண்ணெய் சேருங்கள். இதன் அடர்த்தி கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த எண்ணெய் சற்று பிசு பிசுப்பு தன்மையுடன் காணப்படும்.
 • ஆனால் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த எண்ணெய்யை உங்கள் விரல்களில் எடுத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும்.
 • 20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு 10-15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு எப்பொழுதும் போல் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள்.
 • இந்த மசாஜ்யை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

Sharing is caring!