மோர் : குளிர்ச்சிக்கு மட்டுமல்ல…

மோர் குளிர்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், ‘குளிர்ச்சி’யையும் தாண்டி பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது, மோர். அதை பற்றி பார்க்கலாம்.

தயிருடன் ஒப்பிடும்போது உணவியல் நிபுணர்களின் ‘ஓட்டு’ மோருக்கே விழுகிறது. இந்த வெயில் வேளையில் நாமெல்லாம் மோரைத் தேடிப் பருகுகிறோம்.

மோர் குளிர்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். ஆனால், ‘குளிர்ச்சி’யையும் தாண்டி பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது, மோர்.

அவை பற்றிப் பார்க்கலாம்…

* காரசாரமான உணவுகளை ஒருகை பார்க்கும்போது வயிற்றெரிச்சல் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைக்கும். இதனால் வயிறு எரிவது குறையும். நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.

* உப்பிட்டு மோர் பருகும்போது உடலில் நீர்ச்சத்துக் குறைவு ஏற்படாது.

* மோரில் உள்ள புரதச்சத்து, உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். தினமும் மோர் பருகிவந்தால் உயர் ரத்தஅழுத்தம் கட்டுப்படும்.

* உணவைக் குறைத்து எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், தாதுஉப்புகள், வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட மோரில் கொழுப்பும் குறைவு.

* இஞ்சி, பூண்டு அரைத்துச் சேர்த்த மோரைக் குடித்துவந்தால் சளி, ஜலதோஷம் நீங்கும்.

Sharing is caring!