யானை முகம் ஏன்?

விநாயகர் அவதாரம் பற்றி பல கதைகள், புராணங்களில் சொல்லப்படுகின்றன.

சிவபெருமானுக்கு எப்போதும் நந்தியம்பெருமான் காவல் இருப்பார்.  அதுபோல், தனக்கும் ஒருவர் ஒருவர் காவல் இருக்க வேண்டும் என, பார்வதி தேவி எண்ணினாள். இதையடுத்து, மண்ணையும்

தண்ணீரையும் கலந்து, தன் மனதில் தோன்றிய உருவத்தை உருவாக்கினாள். அதற்கு உயிரும் கொடுத்தாள். அது சிறு பையனாக மாறியது. அதற்கு, கணபதி என, பெயரும்  வைத்தாள்.
கணபதியை காவலுக்கு வைத்து விட்டு, பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அப்போது, சிவன் வந்தார். அவரை, உள்ளே விடாமல் கணபதி தடுத்தார். ஆத்திரமநை்த சிவன், கணபதியின் தலையை வெட்டினார்.

இதையறிந்த பார்வதி, கதறி அழுதாள். கணபதிக்கு மீண்டும் உயிர் தர வேண்டும என, வேண்டினாள்.
இதையடுத்து, வடக்கு திசையில் யாராவது படுத்திருந்தால், அவரது தலையை வெட்டி எடுத்த வரும்படி நத்தியிடம் சிவ பெருமான் கூறினார்.

வடதிசை நோக்கிச் சென்ற நந்தியின் கண்களில், முதலில், ஒரு யானை தான் தென்பட்டது. இதையடுத்து, அந்த யானையின் தலையை வெட்டி எடுத்து வந்தார். அந்த தலையை, கணபதியின் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார் சிவன்.  அது முதல், கணபதி யானை முகன் ஆனார்.

Sharing is caring!