ராமரின் வெற்றிக்கு உதவியது யார்?

மனிதகுலத்தின் ஆதி தெய்வமாகவும், நேரடியாக காட்சிக் கொடுக்க கூடிய  தெய்வமாகவும் போற்றி வழிபடப்பெறுபவர் சூரிய பகவான். சூரியனே பூமியின் இயக்கத்துக்கு ஆதார சக்தியாகத் திகழ்கிறது. சூரிய வெளிச்சமும் அதன் வெப்பமும் இல்லாமல் உலகமும் இல்லை; உலகத்தின் இயக்கமும் இல்லை.  சூரியனிலிருந்து தோன்றியதுதான் பூமி. பூமியின் தாயான சூரியனை, பிரதான தெய்வமாக வணங்குவது, நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வழக்கமாக உள்ளது.

ஆதிசங்கரர் ஏற்படுத்திய ஆறு மதங்களில், சவுரம் எனப்படும்,  சூரியனை வணங்கும் மதமும் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. இன்றும் `சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும், பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமும் அதிகாலை சூரியனை வணங்கினால், பலநோய்களை நீக்கும், இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில், சூரிய வழிபாடு உள்ளது.  மேலும் சூரியபகவானுக்குக்கென்று அங்கு கோயில்களும் உள்ளன.

ராவணனைப் போரில் வெல்வதற்கு ராமருக்கு  துணைபுரிந்தது, சூரிய பகவான் தான். ஆம், சூரிய வம்சத்தில் தோன்றிய ராமரை, ‘ஆதித்ய ஹிருதயம்’ எனும் சூரியனை குறித்து சுலோகம் தான்,  ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது,.

ராவணனுடனான யுத்தத்தில் ராமர் களைப்புற்றபோது, அகஸ்திய  முனிவர், ராமருக்கு அருளிய `ஆதித்ய ஹிருதயம்’ எனும் மந்திரம்தான் சோர்வை நீக்கி வெற்றியைத் தந்ததாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது.
தினமும், அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொடர்ந்து வெற்றிகள் கிட்டும்.
முடியாதவர்கள், ஞாயிறு தோறும், ஆதித்ய ஹிருதயத்தை பாராயணம் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள், கீழ் கண்ட மந்திரங்களை சொல்லலாம்.

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி!
தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’

Sharing is caring!