ராம பிரான் கோபக்காரனாக மாறியது எப்போது?

அமைதி, சாத்வீகம் மனிதனுக்கு தேவையான குணம், ஆனால், எப்போதும், சாத்வீகமாக இருந்தால், அது ஏளனத்துக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் தேவைப்படும் நேரத்தில், கோபம் அடைய வேண்டும். இதற்கு ராமாயணத்திலேயே நல்ல எடுத்துக் காட்டு உள்ளது.

ராமாயணத்தில், சாத்வீகத்துக்கு பெயர் பெற்றவர் ராமபிரான். யாரையும், அவர் தவறாக பார்த்தது இல்லை. எண்ணியதும் இல்லை. பரதனை உலகமே துாற்றிய போது, ‘ என் தம்பி, ஒரு போதும் தவறு செய்ய மாட்டான்’ என, உறுதிபட கூறியவர் ராமபிரான்.அப்படிப்பட்ட ராமனை கோபப்பட வைத்த ஒரு சம்பவம் நடந்தது.

இலங்கையில், அசோக வனத்ததில், சீதாதேவியை ராவணன் சிறை வைத்திருப்பதை , ஆஞ்சநேயர் கண்டுபிடித்து,  ராமனிடம் தெரிவித்தார். இதையடுத்து, இலங்கைக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை ராமன் செய்தார்.

இலங்கைக்கு செல்ல பாலம் கட்ட வேண்டுமே, சமுத்திர ராஜனை ணே்டி ராமர் விரதம் இருந்தார்.ஒருநாள் இல்லை; 3 நாட்கள் எதுவும் பேசாமல் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், சமுத்திர ராஜன் வரவில்லை. ராமனை விட நான் தான் பெரிய ராஜா என்ற இறுமாப்பு, சமுத்திர ராஜனுக்கு இருந்தது. அதனால், ராமன் விரதம் இருந்தும், சமுத்திர ராஜன் வரவில்லை.

நான்காம் நாள் காலை விரதத்தை முடித்தார் ராமன். சமுத்திர ராஜன் வராதததை பார்த்த பின் ராமனுக்கு கோபம் வந்தது. பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். சமுத்திரத்தை நோக்கி அதை செலுத்தினார். அது நெருப்பை கக்கிக் கொண்டு சமுத்திரத்தில் விழுந்தது. அடுத்த நிமிடம் கடல் நீர் கொதித்தது. அதிலிருந்து மீன்கள் உட்பட பல ஜீவராசிகள் அஞ்சி நடுங்கின.  பயந்து போன சமுக்திர ராஜன், பதறியடித்தபடி ராமன் முன் ஓடி வந்தான்.

‘ராமா‘ என்னை மன்னித்துவிடு, உன்னை விட பெரியவன் என்ற அகம்பாவம் என் கண்ணை மறைத்துவிட்டது.
பிரமாஸ்திரத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் காப்பாற்றுராமன் சமுத்திர ராஜன் கெஞ்சினான். ராமரும் மன்னித்து கூறினர்.
‘நான் விரதம் இருந்த போதே, நீ வந்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. கடித்தாள் தான் தேள்; இல்லாவிடில் பிள்ளை பூச்சியாக மதிப்பீர்கள்  என எனக்கு தெரியும்,’ என்றார் ராமன்.

Sharing is caring!