ரேவதி நட்சத்திரக்காரர்களின் குணநலன்

27 நட்சத்திரங்களின் குண நலன்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று ரேவதி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குண நலன்களைப் பார்க்கலாம்.

இந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்கள் மீன ராசியை கொண்டிருப்பார்கள். இது புதனின் ஆதிக்கத்தைக் கொண்ட மூன்றாவது நட்சத்திரம்.

ரேவதி நட்சத்திரத்தில் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். உங்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்பு வீர்கள். குழப்பங்கள் நிறைந்தவர்களாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பாலினர் அன்பை இயல்பாகவே பெற்று விடுவீர்கள். எல்லோருக்கும் எல்லா வகையிலும் உதவி புரிவீர்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாக திகழ்வீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனியை அம்சமாக கொண்டிருப்பீர்கள்.

குடும்பத்தைக் கட்டுகோப்பாக வைத் திருக்க விரும்புவீர்கள். வாழ்க்கையில் பெரிய சாதனைகளைச் செய்ய விரும்பு வீர்கள். பிறரது எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். வசீக ரமான தோற்றத்தைக் கொண்டவர்களாக விளங்குவீர்கள்.உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியில் ஒன்றும் பேசமாட்டீர்கள். நண்பர்கள் இக்கட்டில் இருந்தால் கேளாமலேயே உதவி செய்வீர்கள். கல்வி கலைத்துறையில் ஆர்வம் கொண்ட வர்களாக இருப்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனியை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். இறைபக்தி மிகுந்த உங்களுக்கு கடவுள் அருளும் உண்டு. இரக்க குணம் மிகுந்தவர்களான நீங்கள் உங்கள் பகைவரிடமும் வன்மம் காண்பிக்க மாட்டீர்கள்.

ஆடை ஆபரணங்கள் சேர்க்கையில் ஈடுபாப்டு உள்ளவர்கள். எப்போதும் அன்பு காட்டி இனிமையாக பழகுவதையே விரும்பு வீர்கள். தொழிலில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தின் நான்காம் பா தத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டிருப்பீர்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்தாலும் எளிமை யாக இருக்கவே விரும்புவீர்கள். இறை நம்பிக்கையிலும் இறை அன்பர்களிடமும் நாடி செல்வீர்கள். உயர்ந்த இடத்தில் இருப்பவர்களது நட்பு கிடைக்க பெறுவீர்கள். தைரியமாக செயல்படும் குணங்களைக் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும் சாமர்த்திய சாப்லிகளாக இருப்பீர்கள். அழகிய தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். இளகிய மனத்தை உடையவர்கள். வாழ்வு முழுவதும் பொருளாதார பிரச்னைகளைச் சந்திக்க மாட்டீர்கள்.

இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. உடனடியாக சோர்ந்து போகும் குணம் இல்லாமல் இருந்தால் வாழ்வில் மேலும் மேலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.

Sharing is caring!