ரோஜா இதழ் தேநீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.!!

ரோஜா பூவில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து., நமது உடலை பாதுகாக்கிறது.

இதுமட்டுமல்லாது உடலின் எடையை குறைக்க., மலட்டு தன்மையை நீக்குவதற்கு., செரிமான பிரச்சனைகளை சரி செய்வது மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரசச்னைகளை சரி செய்கிறது. இதுமட்டுமல்லாது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மாதவிடாய் வலியை சரி செய்யவும் உதவுகிறது.

ரோஜா பூவின் இதழ்களை தேநீர் போன்று செய்து சாப்பிடுவதன் மூலமாக மாதவிடாய் வலியானது குறையும். அந்த வகையில்., ரோஜா இதழ் தேநீர் செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

ரோஜாஇதழ் தேநீர் செய்யத் தேவையான பொருட்கள்: 

மிளகு தூள் – 1 தே.கரண்டி.,
தேன் 1 – 1 தே.கரண்டி.,
ரோஜா இதழ்கள் – 1 குவளை…

ரோஜாஇதழ் தேநீர் செய்முறை:

பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ரோஜா இதழை சேர்த்து சுமார் 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இதமான சூட்டிற்கு வந்தவுடன் தென் மற்றும் மிளகு தூளை சேர்த்து குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனையில் இருந்து பெண்களுக்கு விலக்கம் கிடைக்கும்.

Sharing is caring!