லிங்கத்தின் மீது நெய் வைத்தால், வெண்ணெயாக மாறும் அதிசய தலம்?

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம். கும்பகோணம் அருத்த  திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே, நீடூரில், ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால், சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது, அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை, வேலுார் மாவட்டம், திருமணிக்குன்றத்தில் உள்ள  ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* நாகை மாவட்டம், தலைச்சங்காட்டில் , திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால், அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில், வடக்குநாதர் சுவாமி கோவிலில் சிவன், நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம், சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து, பவுர்ணமியில்,   முழு லிங்கமாகவும், அடுத்த 15 நாளில், தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

Sharing is caring!