வசம்பு வாயில வெச்சு தேய்ங்க…

நாட்டுப்புறங்களில் விளையாட்டாக ஒருவரை திட்டும்போது உன் வாயில் வசம்பை வெச்சு தேய்க்க என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் வசம்பை வெச்சு தேய்த்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். பிறந்த குழந்தை இருக்கும் வீட்டில் வசம்பு இல்லாமல் இருக்காது. இதற்கு பிள்ளை வளர்ப்பான் என்று மற்றுமொரு பெயர் உண்டு.

இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டிருக்கும். வசம்பு உடல் வெப்பத்தை அதிகரிக்கக் கூடியது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச் னைகளையும் தீர்த்துவிடும் வல்லமை வசம்புக்கு உண்டு.  சித்தர்கள் சித்தவைத்திய முறையில் பயன்படுத்தும் முக்கியமான பொருள் இது. நமது முன்னோர்கள் அவசர காலத்தில் கை வைத்தியமாக பயன்படுத்த இதை எப்போதும் வீட்டில் வைத்திருப்பார்கள்.

பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கும் வசம்பின் பயன்கள் பற்றி பார்க்கலாமா?


வசம்பை பயன்படுத்துவதற்கு முன்பு:
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் விட்டு வசம்பின் மீது தேய்த்து விளக்கை ஏற்றி அதில் சுட்டு வைக்கவேண்டும். உரைக்க உரைக்க அந்தக் கரி தீரும் போது மீண்டும் மீண்டும் இதேப்போல் சுட்டு கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு:
பிறந்த குழந்தைக்கு1 வயதாகும் வரை வசம்பு பயன்படுத்துவார்கள். வாரம் ஒரு முறை சுத்தமான தேனில் வசம்பை குழைத்து குழந்தையின் நாக் கில் 3 சொட்டுகள் வைத்தால் குழந்தைக்கு பேச்சுத்திறன் விரைவாக கிடைக்கும்.

குழந்தை அவ்வப்போது வயிறு உபாதையால் அழுதுகொண்டே இருக்கும் அப்போது வசம்பை தாய்ப்பாலில் குழைத்து வயிற்றின் தொப்புள் பகுதி களில் தடவி வந்தால் வயிறு உபாதை கட்டுப்படும். சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வசம்பை குழைத்தும் பூசி வரலாம்.

Sharing is caring!