வடக்கில் தலை வைத்து படுக்க கூடாது ஏன்?

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன? இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் பற்றியும், அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும். காந்தம், இரும்பு உலோகத்தை தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது. காந்ததிற்கு இரண்டு துருவங்கள்  உண்டு

அவை, வட துருவம், மற்றும் தென் துருவம். காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள், ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்; எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தன்மைகளைக் கொண்டதாகும்.
ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம், தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.
பூமி எப்படி காந்தம் ஆனது? சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசைக்கு, சூரியனால் உருவாக்கப்படுகிறது.

எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும், இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும்பெறுகிறது. இதனால். பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி, தன்னைத்தானே சுற்றுவதனாலும். காந்த சக்தியைப் பெறுகின்றது.
மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில், இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக ,மனிதன், பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

பூமிக்கும் இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம், எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம், வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை, நேர் மின்னோட்டம் கொண்டது. கால், எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம், மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும், உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

Sharing is caring!